பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

சொற்களையும் பிராகிருத மொழிச் சொற்களையும் எழுதின மணிப்பிரவாள நடை நூல்கள் அக்காலத்திலேயே அழிந்து விட்டன. ஏனென்றால் தமிழ் பிரவாள நடை நூல்களை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மரபுக்குப் புறம்பானதாக இருந்தபடியால் அதைத் தள்ளி விட்டனர். ஆனால் பிற்காலத்தில் சமஸ்கிருதத் சொற்களைத் தமிழுடன் கலந்து பிரவாள நடை நூல்களை எழுதினார்கள். துள்ள மணிப்பிரவாள நடை நூல் ஸ்ரீபுராணம் சமண சமய நூல்.

பிற்காலத்தில், கி.பி. 13, 14-ஆம் நூற்றாண்டுகளில் வைணவர்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்துக்கு வியாக்கியானங்கள் (விரிவுரைகள் எழுதினார்கள். ஆனால் அந்த மணிப்பிரவாள நூல் படிக்கப்படாமல் கிடந்தன. ஏனென்றால், வட மொழிப் புலவருக்கும் விளங்காமல் தமிழ் மொழிப் புலவருக்கும் விளங்காமல் இருந்தபடியால் இதனை மக்கள் ஏற்கவில்லை. ஆகவே, இந்தக் குறையைப் போக்குவதற்கு சென்னைப் பல்கலைக் கழகத்தார் வைணவ வகையான நூல்களான மணிப் பிரவாள நூல்களை மாற்றி தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். சமணர் உண்டாக்கிய மணிப்பிரவாள நடை நூல் தமிழர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இடையில் வைணவர் மணிப்பிரவாள நடையை ஏற்றுக் கொண்டு அதில் உரை நூல்களை எழுதிய போதிலும் போற்றப்படாமல் இருந்தன. சைவ சமயத்தார் பிரவாள நடையை அடியோடு ஏற்றுக் கொள்ளவில்லை. பௌத்த-சமண சமயத்தார் செய்து கொண்டு மணிப்பிரவாள நடை தமிழரால் ஏற்றுக் கொள்ள வில்லை. இதன் காரணம் அது மரபுக்கு ஒத்து வராதது தான்.

பௌத்த-சமண சமயத்தார் தமிழ்நாட்டில் எழுத்து என்னும் புதுவகை எழுத்துக்களை உண்டாக்கினார்கள் என்று சொன்னோம். கிரந்த எழுத்து அன்று தொட்டு இன்றளவும் கையாளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் எழுதப்பட்ட சமஸ்கிருத நூல்கள் எல்லாம் கிருந்த எழுத்தினால் எழுதப்பட்டவையே. சைவ ஆகமங்களும் வைணவ ஆகமங்களும். ஏன்? பாரத இராமாயணங்களும் தமிழ்நாட்டில் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்டவைகளே. பல்லவ சேர சோழ பாண்டிய அரசர்களின் சிலா சாசனங்களிலும் செப்பேடுகளிலும் வருகிற சமஸ்கிருத சுலோகங்களும் சமஸ்கிருதச் சொற்களும் கிரந்த எழுத்தினால் எழுதப்பட்டவையே. வட இந்தியாவில் எழுதப்பட்ட தேவநாகரி எழுத்துகள் தமிழ்நாட்டில் உபயோகப்படுத்தப்படாமல் கிரந்த எழுத்துகளே உபயோகப் படுத்தப்பட்டன.