பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

233

ஆசிரியர் செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர். இது நம்பி திருவிளையாடற் புராணம் என்றும் பழைய திருவிளையாடற் புராணம்என்றும் கூறப்படுகிறது. இதற்குப் பிறகு எழுதப்பட்டது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம். இதுவே இப்போது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

திருவிளையாடற் புராணங்களில் கூறப்படுகிற “மாபாதகந் தீர்த்த” திருவிளையாடலும் "பன்றிக் குட்டிகளுக்குத் தாயான" திருவிளை யாடலும் பௌத்த மதத் தொடர்பான கதைகள். இவற்றை இங்கு விளக்குவோம். முதலில் மாபா தகத்தீர்ந்த திருவிளையாடலைப் பார்ப்போம்.

பழைய திருவிளையாடற் புராணத்தில் 34வது எண்ணுள்ளது மாபாதகந்தீர்த்த திருவிளையாடல். பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில் 26வது எண்ணுள்ளது மாபாதகந்தீர்த்த படலம். இந்தக் கதை, பெரிய பாதகச் செயலைச் செய்த பிராமணன் ஒருவன் வீடுபேறு (மோட்சம்) அடைந்ததைக் கூறுகிறது. இது பௌத்த மதத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை என்பது நன்றாகத் தெரிகிறது. பௌத்தக் கொள்கை

புராணத்து மாபா தகந்தீர்த்த கதையைக் கூறுவதற்கு முன்பு அதிலுள்ள பௌத்த மதக் கொள்கையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத்தினுடைய வேதமானது விநயபிடகம், சூத்திர பிடகம், அபிதம்ம பிடகம் என்னும் மூன்று பிரிவையுடையது. இதில் சூத்திர பிடகத்தில் ஒரு பிரிவான குட்டக நிகாயத்தில் தம்மபதம் என்னும் ஒரு பகுதி உண்டு. தம்மபதம் பௌத்த மதத் தர்மத்தின் முக்கியக் கொள்கைகளைக் கூறுகிறது. தம்மபதத்தின் 21வது பிரிவு பகிண்ணகவர்க்கம் என்பது. இதில் நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய பொருள் காணப்படுகிறது. அஃதாவது:

மாதரங் பிதரங் ஹந்த்வா ராஜனோ த்வே சசக்தியே ரட்டங் லானுசரங் ஹந்த்வா அநீகோ யாதி பிராஹ்மனோ

தாயைக் கொன்று தந்தையைக் கொன்று பலமுள்ள இரண்டு அரசர்களையும் கொன்று அவர்களின் ஆட்சியை அழித்துவிட்ட பிராமணன் துக்கம் (நரகம்) இல்லாமல் போகிறான் (தம்மபதம்பகிண்ணக வர்க்க-5) என்பது இதன் பொருள்.