பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

வகுத்துக் கொடுத்தது. சில காலம் கழித்து பிரமதத்த அரசன் இறந்து போனான். நாட்டு மக்கள் நடக்க வேண்டிய ஒழுக்கமுறைகளை வகுத்துக் கூறிய பிறகு பன்றிக்குட்டிகள் காட்டுக்குப் போய்த் தவஞ் செய்து கொண்டிருந்தன. இதுதான் புத்த ஜாதகக் கதைகளில் கூறப்படுகிற துண்டில ஜாதகக் கதை.

பன்றிக்குட்டிகளுக்குத் தாயானது

இந்தப் புத்த ஜாதகக் கதை சில மாற்றங்களுடன் திருவிளை யாடற் புராணத்தில் கூறப்படுகிறது. பன்றிக்குட்டிகக்குத் தாயான திருவிளையாடல் பாடல் என்றும் பன்றிக்குட்டிகளுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் என்றும் இரண்டு பிரிவாக இந்தக் கதை திருவிளை யாடற் புராணங்களில் கூறப்படுகிறது. வேளாளன் ஒருவன் காட்டிலே வாழ்ந்து கொண்டிருந்தான். அவனுடைய மனைவி வயிற்றில் பன்னிரண்டு பிள்ளைகள் பிறந்தனர். பிள்ளைகள் இளையவர்களாக இருந்தபோதே தாய் தந்தையர் இறந்து போனார்கள். பிள்ளைகள் பன்னிருவரும் வேட்டைக்குப் போனபோது காட்டிலே தவஞ் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரைக்கண்டு இரைந்து கூச்சலிட்டுக் கல்லாலும் மண்ணாலும் அடித்தார்கள். முனிவர், “நீங்கள் பன்றிகளாகப் பிறக்கக்கடவீர்கள்" என்று சாபங் கொடுத்தார். சாப மீட்புத் தரும்படி அவர்கள் வேண்ட, "பன்றியாகப் பிறந்த பிறகு உங்களுடைய தாய்ப்பன்றி இறந்து விடும். அப்போது சிவபெருமான் உங்களுக்கு அருள் புரிவார்” என்று சாப விடை கொடுத்தார். பிறகு பன்னிருவரும் ஒரு காட்டுப்பன்றியின் வயிற்றில் பன்றிக்குட்டிகளாகப் பிறந்தனர். அப்போது பாண்டியன் வேட்டைக்கு வந்து தாய்ப்பன்றியை அம்பு எய்து கொன்றான். குட்டிகள் தாயைக் காணாமலும் பால் இல்லாமலும் வருந்தின. அப்போது சிவபெருமான் (சொக்கநாதர்) தாய்ப்பன்றியாக வந்து அக்குட்டிகளுக்குப் பால் ஊட்டி அருள் செய்தார்.

பன்றிக் குட்டிகள் வளர்ந்து வாழ்ந்த பிறகு அவை இறந்து போயின. பிறகு, அப் பன்றிகள் மீணடும் ஒரு வேளாளனுக்கு மக்களாகப் பிறந்தன. அந்தக் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து அழகும், ண்மையும், வீரமும், அறிவும் உள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். இவர்களுடைய சிறப்புக்களை அறிந்த பாண்டியன் இவர்களைத் தன்னிடத்தில்அழைத்துக் கொண்டு சாமந்த பதவிகளைக் கொடுத்துச் சிறப்புச் செய்தான். இப்பன்னிருவரும் பாண்டியனுக்குப் பல