பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

239

வெற்றிகளையுண்டாக்கிக் கொடுத்து சிறப்பாக வாழ்ந்தார்கள். இவை திருவிளையாடற் புராணங்களில் கூறப்படுகிற கதைகள்.

இந்தத் திருவிளையாடற் புராணக் கதைகளுக்கு (பன்றிக் குட்டிகளுக்குத் தாயானது, பன்றிக்குட்டிகளுக்கு அருள்புரிந்தது) மூலக்கதையாக இருப்பது புத்த ஜாதகத்தில் கூறப்படுகிற துண்டில ஜாதகக் கதை என்பதில் ஐயமில்லை.

மதம் மறைந்து, கொள்கை நின்றது

பௌத்த மதம் பிற்காலத்தில் மறைந்துவிட்ட போதிலும், அந்த மதத்தின் கொள்கைகளும் கதைகளும் தமிழ்நாட்டில் வழங்கிவந்தன. பிற் காலத்தில் அந்தக் கதைகள் வெவ்வேறு மாறுதல் அடைந்து புதிய உருவங்கள் பெற்றுள்ளன. தமிழ் நாட்டில் பௌத்த மதம் சிறப்படைந் திருந்த காலத்தில் புத்த ஜாதகக் கதைகள் தமிழில் வசனமாகவும் செய்யுளாக வும் எழுதப்பட்டிருந்தன. பிற்காலத்தில், பௌத்த மதம் அழிந்து மறைந்துபோன காலத்தில், அந்த நூல்கள் போற்றுவார் இல்லாமல் அழிந்து மறைந்து போயின. இதன் காரணமாகத் தமிழ் மொழி, பௌத்த இலக்கியச் செல்வங்களை இழந்துவிட்டது. புத்தர் போதி சத்துவராக இருந்தபோது மனிதராகவும், பலவித விலங்கு களாகவும் பிறந்து தர்மோபதேசஞ்செய்த ஜாதகக்கதைகள் தமிழிலும் இருந்தன என்பதற்குக் கீழ்கண்ட செய்யுட்கள் சான்று பகர்கின்றன. இந்தச் செய்யுட்களில் போதிசத்துவர் பிறந்த பிறப்புகள் கூறப் படுகின்றன. மிக்க தனங்களை, மாரி மூன்றும் பெய்யும் வெங்களிற்றை, மிகுசிந்தா மணியை, மேனி ஒக்கஅரிந் தொருகூற்றை, இரண்டு கண்ணை, ஒளிதிகழும் திருமுடியை, உடம்பில் ஊனை எக்கிவிழுங் குருதிதளை, அரசு தன்னை இன்னுயிர்போல் தேவியை, ஈன்றெடுத்த செல்ல, மக்களை வந்திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும் வானவர்தம் உறைந்தபதி மானா வூரே.

வான் ஆடும் பரியாயும் அரிணம் ஆயும் வனக்கேழல் களிறாயும் என்காற் புன்மான் தானாயும் பனை எருமை ஒருத்த லாயும் தடக்கை இளங்களிறாயும் சடங்க மாயும்