பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

247

மேலுகத்தில் இருப்பவையும் கீழுலகில் இருப்பவையும் சிறியவையும் பெரியவையும் காணப்படுவனவும் காணப்படாதனவும் அண்மையில் இருப்பவையும் சேய்மையில் இருப்பவையும் பிறந்திருப்பவையும் பிறக்கப் போகிறவையும் ஆகிய எல்லா உயிர்களும் மகிழ்ச்சியுடனும் சுகத்துடனும் இருக்கட்டும்." இவ்வாறு மேத்தையைப் பற்றித் தியானம் செய்ய வேண்டும்.

கருணை. கருணை என்பது மன இரக்கம் உடைமை. எல்லா உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானித்தல். எல்லா உயிர்களும் பிறப்பு இறப்பு முதலிய துன்பங்களை அடைகின்றன; அத்துன்பங்களிலிருந்து அவை விடுபட வேண்டும் என்று கருணை கொள்ள வேண்டும். பகைவர் நண்பர் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லா உயிர்களும் துன்பம் நீங்கி இன்பம் அடைய வேண்டும் என்று எண்ணித் தியானம் செய்வதே கருணைத் தியானம் ஆகும்.

முதிதை: முதிதை என்பது மகிழ்ச்சி என்று பொருள்படும். இந்தத் தியானத்தைச் செய்பவர், தாமும் நம்மைச் நேர்ந்தவர்களும் உலகத் திலுள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று கருதித் தியானம் செய்ய வேண்டும்.

உபேக்ஷை: அதாவது மன அமைதியுடைமை. மேற்சொன்ன மூன்று தியானங்களையும் செய்து முடித்தவர் பிறகு இந்தத் யானத்தைச் செய்ய வேண்டும். சுகம் பெற்ற போது இன்பம் அடையாமலும், துக்கம் அடைந்தபோது துன்பம் அடையாமலும் மனத்தை ஒரே நிலையில் நிறுத்தல். அதாவது விருப்பு வெறுப்பு அற்ற மனத்தோடு இருத்தல்.

இந்த நான்கு தியானத்துடன் அசுப பாவனையையும் செய்தல் வேண்டும். அசுப பாவனை என்பது உடம்பின் இழிதன்மையைச் சிந்தித்துப் பார்த்தல். உயிர் பிரிந்து போன உடம்பானது வீங்கிப் போதல், கறுத்துப் போதல், அழுகிப் போதல், புழுத்துப் போதல் முதலிய பத்து வகையான அறிவுத் தன்மையடைவதைச் சிந்தித்துப் பார்த்துப் பற்றறுத்தல்.

ס

இவ்வாறு யோக தியானங்களினாலே ஞானம் அடைந்த பிக்ஷ வானவர் பிராணாயாமம் (மூச்சு நிறுத்தல்) செய்ய வேண்டும். மூச்சை நிறுத்தப் பழகும் பிராணாயாமத்திற்குப் பௌத்தர் ஆனாபானஸ்மிருதி