பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

அகநானூறு, ஐங்குறு நூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு முதலிய அகப்பொருள் நூல்களும், புறநானூறு, பதிற்றுப்பத்து, தகடூர் யாத்திரை முதலிய புறப்பொருள் நூல்களும் அக்காலத்தில் தோன்றிய நூல்களாம்.

சங்க காலத்திலே மதச் சார்புடைய நூல்கள் இல்லையா என்றால், உண்டு. அக்காலத்திலும் மதச் சார்புடைய நூல்கள் இயற்றப்பட்டன. பரிபாடல்களும், தேவபாணிகளும் சங்க காலத்துச் சமய நூல்களாகும். (அவை பெரும்பாலும் மறைந்து போயின.) ஆனால், அவை அகப்பொருள் புறப்பொருள் இலக்கியங்களைப் போல் முதலிடம் பெறவில்லை. அக்காலத்து மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவை அகப்பொருள், புறப்பொருள் இலக்கியங்களே.

ம்

சங்க காலத்திலே சிவன், திருமால், முருகன், கொற்றவை, வேந்தன் (பிற்காலத்தில் இந்திரன்) முதலிய தெய்வ வழிபாடுகள் நிகழ்ந்தன. ஆனால், மக்களின் பொது வாழ்க்கையில் மதம் முதன்மை இடம் பெறவில்லை. பிற்காலத்திலே கி.பி 7ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் சைவ, வைணவ அடியார்கள் தோன்றிப் பக்தி இயக்கத்தை வளர்த்ததன் விளைவாகச் சைவ, வைணவ மதங்கள் வளர்ந்து. கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தனிப் பெருஞ் சமயங்களாகப் பிரிந்து மக்கள் வாழ்க்கையிலே முதலிடம் பெற்றது போல, சங்க காலத்திலே சமயங்கள் மக்கள் வாழ்க்கையில் முதலிடம் பெறவில்லை. சிவன், திருமால் வழிபாடுகள் சமய பேதம் இல்லாமல் எல்லோராலும் மேற் கொள்ளப்பட்டன. அது போலவே முருகன், கொற்றவை வழிபாடும் உயர்வு தாழ்வு இல்லாமல் எல்லோராலும் செய்யப்பட்டது. முருகளையும் கொற்றவையும் பொதுவாக எல்லோரும் வணங்கிய போதிலும், அத்தெய்வங்களை முக்கியமாகப் போர்வீரர்களே வணங்கினார்கள். ஆனால், அக்காலத்திலே மக்கள் வாழ்க்கையிலே சமயங்கள் முதன்மை இடம் பெறவில்லை: காதலும் வீரமுமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தன. அதனால் தான் அக்காலத்து இலக்கண நூலாகிய தொல்காப்பியம், அகம், புறம் என்னும் பொருளிலக்கணத்தை விரிவாகக் கூறிற்று.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே அசோகச் சக்கரவர்த்தி காலத்திலே பௌத்த மதம் ஏளைய நாடுகளுக்குச் சென்றது போலவே, தமிழ் நாட்டிற்கும் வந்தது. பௌத்த மதம் தமிழ்நாட்டிற்கு வந்த சில