பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

253

உள்ள பகைகளை வெல்வதே வீரம் என்னும் கருத்தை பௌத்த, சமணர்கள் பரப்பினார்கள். புத்தர் பெருமான் மனக்குற்றங்களை வென்று (மாரனை வென்று) வீரனாக விளங்கியதையும், தீர்த்தங்கரர்கள் மனப்பகைகளை வென்று வீரர்களாகியதையும் அவர்கள் பிரசாரஞ் செய்தார்கள். புறப்பகையை செல்லும் வீரத்தை விட அகப்பகையை வெல்லும் வீரத்தனம் சிறந்தது என்பதை வலியுறுத்தினார்கள்.

இதற்கிடையே, கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ தமிழ் நாட்டின் அரசாட்சி மாறிற்று. தமிழகத்துக்கு அப்பால் இருந்து வந்த களபரர் என்னும் அரசர் சேர சோழ பாண்டிய மன்னர்களை ஒருமிக்க வென்று தமிழகத்தை அரசாண்டார்கள். களபர அரசர்கள் பௌத்த மதத்தையும் சமண சமயத்தையும் பெரிதும் போற்றினார்கள். அவர்கள் அயல் நாட்டினராகையால் தமிழ் மரபையும் தமிழ்ப் பண்பாட்டையும் போற்றவில்லை. அவர்கள் காலத்தில் பௌத்த, சமண சமயத்தின் ஆதிக்கம் வளர்ந்தது. பெளத்த, சமண சமய நூல்கள் அதிகமாகத் தோன்றின. பெருங்கதை. விம்பிசாரக் கதை, சீவகசிந்தாமணி, குண்டலகேவி, வளையாபதி, சூளாமணி, நிகண்டுகள் முதலிய நூல்களைப் பௌத்தரும் சமணரும் இயற்றினார்கள்.

சமண

நீலகேசி, அஞ்சனகேசி, பிங்கலகேசி முதலிய சமய நூல்களும், நாலடியார், ஏலாதி, திரிகடுகம், பழமொழி, சிறுபஞ்சமூலம், திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் முதலிய நூல்களும் சமயத்தவரால் உண்டாக்கப்பட்டவை. வீரசோழியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நன்னூல், நேமிநாதம், சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு முதலியவைகளும் பௌத்த, சமண சமயத்தார் இயற்றிய நூல்கள் ஆகும்.

மேலும், களபர அரசர் காலத்திலே, பௌத்த சமணர்களால் தமிழ்ச் செய்யுள் வகையில் புதிய பாக்கள் தோன்றலாயின. சங்க காலத்திலே பழைய வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாக்களே வழங்கிவந்தன. சங்க காலத்துக்குப் பிறகு பௌத்த, சமணர்கள் விருத்தப்பா என்னும் புதிய பாவையும் பாவினங்களையும் புகுத்தினார்கள். இது, தமிழ் மொழிக்கு அவர்கள் செய்த பெரிய வளர்ச்சியாகும். விருத்தப் பாக்கள் திடீரென்று தோன்றிவிடவில்லை. புதிய நிலையில், அப்பாக்களில் இருந்த

-