பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிய மூதனார் புருடோத்தம நம்பி, சேதிராயர் முதலியோர் திருவிசை பாக்களை இயற்றினார்கள். இவர்களைத் தொடர்ந்து இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்து அடிகள், நம்பியாண்டார் நம்பி, குமரகுருபரர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், அதிவீரராம பாண்டியர், தாயுமான சுவாமிகள், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் பக்திப் பாடல்களை இயற்றினார்கள்.

கைவல்லியம், வேதாந்த சூடாமணி, ஞானவாசிட்டம் ஈசுரகீதை, பகவற்கீதை, பிரமகீதை, பிரபோத சந்திரோதயம் முதலிய வேதாந்த சாத்திர நூல்களும் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன.

கி.பி. 15ஆம் நூற்றாண்டின் இறுதியிலே நமது நாட்டிற்கு வந்த ஐரோப்பிய வியாபாரிகளோடு கிறித்துவ சமயம் நமது நாட்டிற்கு வந்தது. கிறித்துவப் பாதிரிகள் நம்மவரைக் கிறித்துவராக்குவதற்காகத் தமிழைக் கற்றார்கள். கற்றுத் தமது மதநூல்களைத் தமிழில் எழுதினார்கள். கி.பி. 17ஆம் நூற்றாண்டிலிருந்த தத்துவ போதக சுவாமி களும், 18ஆம் நூற்றாண்டில் இருந்த வீரமா முனிவரும் சிறந்த தமிழ் அறிஞர்களாக பாதிரிகள். பாதிரிமார் பெரிதும் வசனத்திலேயே நூல்களை எழுதினார்கள். செய்யுளாக இருந்த நிகண்டுகளுக்குப் பதில் அகராதிகளை இயற்றினார்கள். சூத்திரங்களாக இருந்த இலக்கண நூல்களை வசனமாக எழுதினார்கள். நமது நாட்டுக்கு அச்சு யந்திரத்தைக் கொண்டு வந்து அச்சு புத்தகத்தை உண்டாக்கிய வர்களும் கிறித்துவப் பாதிரிமார்களே. பொதுவாகக் கிறித்துவர்களால் உயர்ந்த தமிழ் இலக்கியங்கள் உண்டாக்கப்படவில்லை. தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம் போன்ற சில நூல்களைத் தவிர வேறு சிறந்த இலக்கியங்கள் கிறித்துவர்களால் படைக்கப்படவில்லை.

ஆங்கில பைபிள் ஆங்கில இலக்கியத்திற்குச் சிறந்த இலக்கியமாக இருப்பது போல, தமிழ் பைபிள் தமிழ் இலக்கியத்தில் சிறந்த நூலாக அமையவில்லை. பொதுவாக பார்க்கும் போது, கிறித்துவ மதம் வளப்பமுள்ள தமிழ் இலக்கியத்தை படைக்கவில்லை. பாதிரி தமிழ் கிறித்துவத் தமிழ் என்று பெயர் பெற்ற ஒருவகை தமிழை அவர்கள் படைத்தார்கள். அந்தத் தமிழ், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. இப்படி கூறுவதனால் கிறித்துவர்களுக்குத் தமிழ்