பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

257

தெரியாது என்று கூறுவதாக கருத வேண்டாம். எத்தனையோ சிறந்த புலவர்கள் கிறித்துவர்களில் இருந்திருக்கிறார்கள்.

அண்மையில் காலஞ் சென்ற சிறந்த தமிழ்ப் புலவரான கிறித்துவர் ஒருவரைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பேசினேன். பாதிரித் தமிழையும் கிறித்துவத் தமிழையும் பற்றி அவரிடம் கூறி, ஏன் நல்ல தமிழைக் கிறித்துவர்கள் வளர்க்கக் கூடாது என்று கேட்டேன். அவர் இந்த குறையை ஒப்புக் கொண்டு பெரிதும் மனம் வருந்தினார். என்ன செய்வது! பாதிரிமார்கள் இடந்தர வில்லையே. சொன்னாலும் கேட்கவில்லையே என்று வருந்தினார். பாதிரிமார்களின் ஆதிக்கம் இருக்கும் வரையில், சமய இலக்கியங்களில் பாதிரிகள் தலையிடுகிற வரையில் கிறித்துவத் தமிழும் பாதிரித் தமிழும் இருந்தே தீரும். ஆனால், இந்த நிலை இப்போது நீங்கி வருகிறது.

கூறி

சமண சமயமும் பௌத்த சமயமும் தமிழ் மொழிக்கு அந்தக் காலத்தில் செய்த பெரிய செய்த பெரிய இலக்கிய இலக்கிய இலக்கணத் தொண்டு களைப்போலக் கிறித்துவ மதம் செய்யவில்லை என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், அதே சமயத்தில் தமிழ் வசன இலக்கிய வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவியிருக்கிறதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முகம்மதிய மதம் எனப்படும் இஸ்ஸாம் மதம் நமது நாட்டிற்கு வந்து ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டு ஆகிறது. இஸ்ஸாம் மதத்தினரும் தமிழ் மொழிக்கு அதிகத் தொண்டு செய்யவில்லை. சீறாபுராணம், இராச நாயகம் என்பன போன்ற சில நூல்களைத் தவிர, வேறு நல்ல இலக்கிய நூல்கள் இன்னும் தமிழில் வரவில்லை. தமிழ் முஸ்லீம்கள் குர்ஆன் வேதத்தை மட்டும் ஓதினால் போதும் என்னும் கருத்தை சமீப காலம் வரையில் கொண்டிருந்தார்கள். குர்ஆன் அரபி மொழியில் இருக்கிற படியால், அதைத் தமிழ் முஸ்லீம்கள் படிப்பதற்காக அரபுத் தமிழ் என்னும் ஒருவகை எழுத்தை உண்டாக்கிக் கொண்டு, அந்த எழுத்தில் தமது மத நூல்களை எழுதிப் படித்தார்கள். குர் ஆனை வேறு மொழி களில் மொழி பெயர்க்கக்கூடாது என்னும் கொள்கையும் அவர்களுக்கு சமீப காலம்வரையில் இருந்தது. இப்போது தான் திருக்குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. சமீப காலத்தில் முஸ்லீம் தமிழர் தமிழிலே நல்ல நூல்களை எழுத முனைந்திருக்கிறார்கள்.