பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

தமிழ் முஸ்லீம்களுக்கு அரபி மொழி, பெர்சியன் மொழிகளுடன் அதிகத் தொடர்பு உண்டு. தாய்மொழியாகிய தமிழையும் அரபி பாரசீக மொழிகளையும் கற்றுத் தேர்ந்த முஸ்லீம்கள் அம்மொழிகளில் உள்ள சிறந்த நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்; தமிழில் உள்ள திருக்குறள் போன்ற நூல்களை அரபி, பாரசீக மொழிகளில் மொழி பெயர்த்தல் வேண்டும்.

கிறித்துவர்களுக்கு இலத்தீன், கிரீக்கு, ஈப்ரு முதலிய மொழிகளின் தொடர்பும், அவற்றைப் படிக்கும் வாய்ப்பும் உண்டு. அந்த மொழிகளை யும் தமிழ் மொழியையும் நன்றாகக் கற்ற கிறித்துவர்கள் அந்த மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தல் வேண்டும்.

முஸ்லீம் மதத்தாரும் கிறித்துவ மதத்தாரும் தமிழ் மொழிக்குச் செய்யவேண்டிய பெருந்தொண்டுகள் இன்னும் பல இருக்கின்றன. அத் தொண்டுகளை அவர்கள் விரைந்து செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.