பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

II.

III.

I.

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

சூத்திர பிடகம்:

ஐந்து பிரிவுகளையுடையது. அவை: 1. தீக நிகாய, 2. மஜ்ஜிம நிகாய, 3. சம்யுக்த நிகாய, 4. அங்குத்தர நிகாய,5. குட்டக நிகாய என்பன.

ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயம் பதினைந்து உட்பிரிவு களையுடையது. அவ்வுட்பிரிவுகளாவன:

1. குட்டக பாதம், 2. தம்ம பதம், 3. உதானம், 4. இதிவுத் தகம், 5. ஸத்தநிபாதம், 6. விமான வத்து, 7. பேதவத்து, 8. தேரகாதை, 9. தேரிகாதை, 10. ஜாதகம், 11. (மகா) நித்தேசம், 12. படிசம்ஹித மக்கா, 13. அபதானம், 14. புத்த வம்சம், 15. சரியா பிடகம் என்பன.

அபிதம்ம பிடகம்:

ஏழு பிரிவுகளையுடையது. அவை: 1. தம்மசங்கa, 2. விபங்கம், 3. கதாவத்து, 4. பஞ்ஞத்தி அல்லது பண்ணத்தி (புக்கல பஞ்ஞத்தி) 5. தாதுகதை, 6. யமகம்,7. பட்டானம் என்பன.

திரிபிடக நூல்களுக்குப் பிற்காலத்திலே உரையாசிரியர்கள் பாலிமொழியிலே உரைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரை கள் நாளதுவரையில் தேரவாத பௌத்தர்களால் பயிலப்பட்டு வருகின்றன. அவ்வுரைகளாவன:

பிடக நூலின் பெயர்

விநய பிடகம்:

1. விநயபிடகம்

உரையாசிரியர் பெயரும் உரைநூலின் பெயரும்

ஆசாரிய புத்தகோஷர், சமந்த பாசாதிக என்னும் உரையை எழுதினார்.

2. பாதிமோக்கம்

ஆசாரிய புத்தகோஷர், கங்கா விதரணீ என்னும் உரையை எழுதினார்.