பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

66

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

'அவிஜ்ஜா யதுவேவ அஸேஸ

விராக நிரோதா ஸ்ங்க்கார நிரோதோ

ஸங்க்கார நிரோதா விஞ்ஞான நிரோதோ விஞ்ஞான நிரோதா நாமரூப நிரோதோ நாமரூப நிரோதா ஸ்ளாயதன நிரோதோ ஸளாயதன நிரோதா பஸ்ஸ நிரோதோ பஸ்ஸ நிரோதா வேதனா நிரோதோ வேதனா நிரோதா தண்ஹா நிரோதோ தண்ஹா நிரோதா உபாதான நிரோதோ உபாதான நிரோதா பவ நிரோதோ

பவ நிரோதா ஜாதி நிரோதோ

ஜாதி நிரோதா ஜராமரணம் ஸோக

பரிதேவ துக்க தோமஸ்ஸு பாயாஸா நிருஜ்ஜந்தி’

இதனை மொழிபெயர்த்துச் சாத்தனார் மணிமேகலையில் கூறுவது

காண்க:

“பேதைமை மீளச் செய்கை மீளும் செய்கை மீள உணர்ச்சி மீளும்

உணர்ச்சி மீள அருவுரு மீளும் அருவுரு மீள வாயில் மீளும் வாயில் மீள ஊறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் நுகர்ச்சி மீள வேட்கை மீளும் வேட்கை மீளப் பற்று மீளும் பற்று மீளக் கருமத் தொகுதி மீளும், கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும், தோற்றம் மீளப் பிறப்பு மீளும், பிறப்புப் பிணிமூப்புச் சாக்கா டவலம் அரற்றுக் கவலை கையா றென்றிக் கடையில் துன்பம் எல்லாம் மீளும்'

99

(மணிமேகலை 30: 119-133)

இந்தச் சார்புகளை (நிதானங்களை) ஊழின் வட்டம் அல்லது ஊழ் மண்டிலம் என்பர். இவ்வூழ்வட்டம் சந்தி, கண்டம், காலம், குற்றம், வினை, பயன், நோய் காரணம் என்னும் உறுப்புக் களையுடையது. (படம் காண்க)