பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் பௌத்தம்

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1940 இல் எழுதிய பௌத்தமும் தமிழும் என்ற நூல் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் எழுதிய சமயம் குறித்த முதல் நூல் இதுவெனச் சொல்ல முடியும். பாலி மொழி மற்றும் பல்வேறு பௌத்த மத வரலாறுகள் ஆகியவற்றைப் படித்து அதில் உள்ள தகவல்களைத் தமிழ்ச் சூழலுக்கு எவ்விதம் வழங்குவது என்னும் கண்ணோட்டத்தில் இந்நூலை உருவாக்கியுள்ளார். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்குள்ள சமயமாக பௌத்தம் இருந்தது; பின்னர் அது முற்றிலும் செல்வாக்கு இழந்தது என்னும் கருதுகோளை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் முன்வைத்து இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலில்தான் முதல்முதல் கௌதமபுத்தரின் முழுமையான வாழ்க்கை தமிழில் அறிமுகப்படுத்தப் படுகிறது என்று கூறமுடியும்.

பாலி மற்றும் சமசுகிருத மொழிகளில் பௌத்தம் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டில் செயல்பட்ட பௌத்தம் குறித்த தகவல்களும் பாலி மொழி நூல்களில்தான் இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ் பௌத்தர்கள் எவ்வகையில் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங் களின் மூலமாக மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளார். மணிமேகலைக் காப்பியம் பௌத்த நூலாக உள்ளதன் மூலம் தமிழில் பௌத்தமத செல்வாக்கை உறுதிபடுத்த முடியும். ஆனால் அதன் தொடர்ச்சி இல்லாமல் போனது ஏன்? என்ற கேள்வியை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுப்புகிறார். அதற்கு விடையாக பல்வேறு பௌத்த மதக்கொள்கைகள் இந்து மதத்தால் உள்வாங்கப் பட்டது என்ற