பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

போது சில பௌத்தத் துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து அரசனுக்குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌத்தக் கோயிலாக்கி னார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

கி.பி. நாலாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும், தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர் என்னும் பௌத்த ஆசாரியர், சோழ நாட்டையும் காவிரிப் பூம்பட்டினத்தையும் சிறப்பித்துக் கூறியிருக் கிறார். காவிரிப் பூம்பட்டினம் செல்வத் தொகுதியும் மக்கட்கூட்டமும் நெருங்கிய இடம் என்றும், அப் பட்டினத்தில் இவர் தங்கியிருந்த பௌத்தப் பள்ளி கணதாஸர் என்பவரால் காணப்பட்டதென்றும், அப்பள்ளி நெடுஞ்சுவர்களால் சூழப்பெற்றுப் பெரிய வாயில்களை யுடையதென்றும், பள்ளிக் கட்டடங்கள் பெரியனவாய் வெண்சுதை பூசப் பெற்றுக் கயிலாயம்போல வெண்ணிறமாக விளங்கும் என்றும் தாம் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் பாலி நூலில் இவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு இவர் சிறப்பித்துக் கூறுகிற செய்யுட்பகுதி சொற்சுவையும் பொருளழகும் ஓசையின்பமும் சிறந்துள்ளது என்று பாலி மொழியறிந்த பண்டிதர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். அப்பகுதி வருமாறு:

“நரநாரீ கணாகிண்ணே அஸங்கிண்ணே குலாகுலே பீதே ஸப்பங்க ஸம்பன்னே பஸன்னே ஸரிதோதகே நானாரதன ஸம்பன்னே விவிதாபன ஸங்கதே காவேரிபட்டணே ரம்மே நானாராமோ பஸோபிதே கேலாஸ ஸிகராகார பாஸாத பதிமண்டிதே காரிதே கணதாஸேன தஸ்ஸனீய மனோரமே விஹாரே விவிதாகார சாருபாகார கோபுரே தத்தா பாசீன பஸ்ஸே மயா நிவஸ்தாஸ்தா ரம்மஸல்லேக ஸாகல்ய ஸீலாதிகுண ஸோபினா அயம் ஸுமதீனா ஸாது யாசிதேன் கதோகதோ

99

அன்றியும், புத்தவம்சம் என்னும் நூலுக்கு இவர் எழுதிய மதுராத்த விலாஸினீ என்னும் உரையின் இறுதியிலும் காவேரிப்பட்டினத்தில் கணதாசர் கட்டிய பௌத்த விகாரையைக் கீழ்வருமாறு குறிக்கிறார்:

“காவீர ஜல ஸம்பாத பரிபூத மஹீதலே

காவேரி பட்டணே ரம்மே நானா நாரீ நராகுலே