பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

59

இந்தச் சான்றுகளினாலே, ஆசாரிய புத்ததத்தர் வசித்திருந் ததும், வேணுதாசர் கட்டிய விகாரை இருந்ததுமான பூதமங்கலம் இந்த இடமாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

புத்தமங்கலம்:

கேய மாணிக்க வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துப் புத்தமங்கலம் என்னும் ஊர், பேராவூர் ஆதித்தியேசு வரர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிறது. 4

கிறது.

இது பௌத்தர் இருந்த ஊர் என்பதை இப்பெயரே விளக்கு

சங்க மங்கலம்:

ஐயசிம்ம குலகால வளநாட்டுத் தானவநாட்டுச் சோழசிகாமணி புரத்துக் கண்டியூரின் மேற்குப் பகுதியில், சங்க மங்கலம் என்னும் ஊர் இருந்ததாக ஒரு சாசனம் கூறுகிறது.5 இப்பெயரே இது பௌத்தர்கள் ஊரென்று தெரிவிக்கிறது. (சங்கம் பௌத்த பிக்குகளின் சங்கம்) பௌத்தராக இருந்து சைவராகிச் சிவபெருமானைக் கல்லால் எறிந்து முக்தி) பெற்ற சாக்கிய நாயனார் பிறந்த ஊர் திருச்சங்க மங்கை என்று பெரியபுராணம் கூறுகிறது. இந்தச் சங்கமங்கலமும் சங்கமங்கையும் ஒரே ஊராக இருக்குமோ என்று ஐயம் உண்டாகிறது.

போதி மங்கலம்:

وو

திருவிடைக்கழி என்னும் ஊரில் உள்ள, சுப்பிரமணிய சுவாமி கோயில் சாசனம் ஒன்று. இவ்வூரைக் குறிப்பிடுகிறது. 6 பெரிய புராணத்தில், "சாக்கியர்தம் போதிமங்கை என்று கூறப்படுவது இவ் வூராக இருக்கலாம். இப்பெயரே, இது பௌத்தர்களுடைய ஊர் என்பதைத் தெரிவிக்கிறது. இவ்வூரில், திருஞானசம்பந்தரும் பௌத்தர்களும் சமயவாதம் செய்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது. திரிபுவன சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனுடைய 13ஆவது ஆண்டில், குன்றத்து நாராயணன் என்பவர், இவ்வூரில் 5 வேலி நிலம் வாங்கி, திருவிடைக்கழி சுப்பிரமணியர் கோவிலுக்குத் தானம் செய்தார்."7

திருவிளந்துறைக் கோயில்:

7

இவ்வூர் கும்பகோணம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், கி.பி. 1580-இல், தீத்தமாயிருந்த நாயகர் கோயில் என்னும் புத்தக் கோயில்