பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

ஆய்வைச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்துமதம் புத்தரை ஒரு அவதாரமாக ஏற்றுக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். வைணவம் திருமாலின் ஒரு அவதாரமாகப் புத்தரை ஏற்றுக்கொண்டதைப் போல சாஸ்தா அல்லது அய்யனார் என்று புத்தரை சைவம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பான குறிப்புகளைத் தமிழ் நிகண்டுகளில் காண முடிகிறது.

பௌத்தம் வழிபட்ட சிறுதெய்வங்களையெல்லாம் இந்துமதம் தனது தெய்வங்களாக உள்வாங்கியது. பௌத்தத்தின் மிக முக்கியமான கோட்பாடான உயிர்க் கொலை நீக்குதல் என்பதையும் இந்துமதம் தனது கருத்துகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். பௌத்த மதத்தில்தான் அரசமரங்களை வழிபடும் மரபு உள்ளது. இந்து மதமும் அரசமரங்களை இன்றும் வழிபட்டு வருவதைக் காண்கிறோம். பௌத்த சமண மதங்களில்தான் மடங்கள் உருவாக்கும் மரபு உண்டு. அம்மரபை சைவ, வைணவ மதங்கள் தனதாக்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இவ்விதம் சைவம், வைணவம் ஆகியவை பௌத்த மதத்தை தன்வயமாக்கிக்கொண்ட வரலாற்றை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

தமிழில் உள்ள வீரசோழியம் போன்ற 11 ஆம் நூற்றாண்டு இலக்கணங்கள் பௌத்த சமயம் சார்ந்ததாக இருப்பதை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் சுட்டிக்காட்டி, பிற்காலங்களில் தமிழ்ச்சமூகத்தில் பௌத்தம் செயல்பட்டது குறித்து விரிவாகப் பதிவுசெய்கிறார். சீத்தலைச் சாத்தனார், சங்கமித்திரர், நாதகுத்தனார், ஆசாரிய புத்ததத்த மகாதேரர், கணதாசர், வேணுதாசர், ஜோதிபாலர், புத்தமித்திரர், போதிதருமர், திண்ணாகர், தருமபாலர்கள், வச்சிரபோதி, பெருந்தேவனார், தீபங்கரதேரர், தம்மகீர்த்தி, காசப தேரர் ஆகிய பௌத்த பிக்குகள் ஆ தமிழ்நாட்டில் வாழ்ந்தது தொடர்பான விரிவான செய்திகளை இந்நூலில் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் பதிவு செய்துள்ளார்.

மணிமேகலை, வீரசோழியம், குண்டலகேசி, சித்தாந்தத்தொகை, திருப்பதிகம், பிம்பிசாரகதை ஆகியநூல்கள் தமிழில் உள்ள பௌத்த நூல்களாகும். இவை குறித்தவிரிவான செய்திகளை இந்நூலில் மயிலை