பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

இலங்கை சென்று தங்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலேறிச் செல்லும் வழியில், கப்பல் புயலில் அகப்பட்டு உடைந்துபோக, நற்காலமாக உயிர்பிழைத்துக் கரையேறினார்கள் என்றும், நாகைப் பட்டினத்தை அடைந்து அங்கிருந்த ‘பதரிகாராமம் என்னும் பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்தார்கள் என்றும், அப்பள்ளிக்கருகில் சீன தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தப் பள்ளியில் புத்த தேவரை வணங்கினார்கள் என்றும் பர்மா தேசத்துக் கலியாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இது நிகழ்ந்தது, கி.பி. 1477 ஆம் ஆண்டில்.

கி.பி. 1725ஆம் ஆண்டில், 'சீனாகோயில்' என்னும் பெய ருள்ள ௫ கோயில் நாகைப்பட்டினத்தில் இருந்ததென்று வாலென்டின் (Valentyn) என்பவர் எழுதியிருக்கிறார்.

மாலையிலிருந்த பௌத்தக் பிாயிலின் கோபுரல்

நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல் தொலைவில், ‘புது வெளிக்கோபுரம்' என்றும், ‘சீனா கோயில்' என்றும், 'கறுப்புக்கோயில்' என்றும், பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1849ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார். (படம். 1 காண்க)