பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

கி.பி. 640இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர், காஞ்சிபுரத்தில் நூறு பௌத்தப்பள்ளிகளும் ஆயிரம் பிக்ஷுக்களும் இருந்ததாகக் கூறுகிறார். ஆசாரிய திந்நாதர், காஞ்சிக்கு அருகில் சிம்மவக்த்ரம் என்னும் இடத்தில் பிறந்தவர் என்று இந்த யாத்திரிகர் கூறுகிறார். இவர் கூறுகிற சிம்மவக்த்ரம் என்னும் ஊர், காஞ்சிக்கு அருகில் உள்ள சீய மங்கலமாக இருக்க வேண்டும்.

யுவான் சுவாங் காஞ்சிக்கு வந்த சற்றேறக் குறைய அதே காலத்தில் காஞ்சிபுரத்தை அரசாண்ட மகேந்திர விக்கிரமன் என்னும் பல்லவ அரசன் (அப்பர் சுவாமிகள் காலத்தவன்), தான் எழுதிய மத்த விலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில் பல பௌத்த விகாரைகள் இருந்தன என்றும், அவ்விகாரைகளுக் கெல்லாம் தலைமையாக இருந்த பெரிய விகாரைக்கு இராஜ விகாரை என்று பெயர் இருந்ததென்றும் கூறுகிறார்.

-

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறான். இவன் பௌத்தர்களுக்காகப் பௌத்தப் பள்ளிகளைக் கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும். கி.பி. எட்டாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும் அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சிபுரத்தில் இவ் வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை இலங்கைக்கு அனுப்பிவிட்டார் என்றும் தெரிகிறது.

66

'இன்னும் காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக்கோயிலின் முன்கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக் கின்றன. ஷ கோவில் உள் மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த விக்கிரகங்கள் இப்போது மிருக்கின்றன. இது புத்தர் கோவில் என்பதற்கு மற்றோர் ஆதார மிருக்கிறது. அஃதாவது இக்கோவில் மேல்புறம் வீதிக் கடைசியி லிருந்து வரும் ஏரிக்குப் 'புத்தேரி' என்றும், வீதிக்கு 'புத்தேரித்தெரு என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப் போதும் வழங்கிவருகின்றன."16