பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

இவ்வூரில் மூன்று மகாயான பௌத்த தெய்வ உருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று தலையுடைந்து கிடக்கிறது. அன்றியும், மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்னும் கிராமத்தில், ஒரு விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது. இதற்கு அருகில் தர்மராஜா கோயிலும் இருக்கிறது. இங்கு ஆதியில், புத்தர்கோயில் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் புத்தர் கோயிலை அழித்து விநாயகர் கோயிலையும் தர்மராஜர் கோயிலையும் கட்டியிருக்க வேண்டும். புத்தர் கோயிலை, விநாயகர் கோயிலாகவும், தர்மராஜர் கோயிலாகவும் அமைப்பது பிற்காலத்து வழக்கம்.

இரண்டாங்காடு:

செங்கற்பட்டு ஜில்லா ஸ்ரீ பெரும்பூதூர் தாலுகா குன்றத்தூருக்கு அருகில் உள்ளது இரண்டாங்காடு. இங்குப் புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது. இவ்வூருக்குப் புத்தவேடு என்று பெயர் கூறப்படுகிறது.

இனி, பாண்டிய நாட்டில் பௌத்தர் இருந்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்.

மதுரை:

இந்த நகரத்தில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன வென்பதை மதுரைக் காஞ்சி என்னும் நூலினால் அறிகிறோம்.

66

"திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை

யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்

தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்

தாமு மவரு மோராங்கு விளங்கக்

காமர் கவினிய பேரிளம் பெண்டிர்

பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங்காக்குங் கடவுள் பள்ளி

இதன் உரை:

'திண்ணிய ஒளியினையுடைய பேரணி கலங்களை யுடையவராய் விருப்பம் அழகு பெற்ற பெரிய இளமையினையுடைய பெண்டிர், தாம் முயங்குதலைச் செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையுங் கூட்டிக் கொண்டு, தாது சேர்ந்த செவ்வித் தாமரைப் பூவைப் பிடித்தாற்போல ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் எடுத்துக் கொண்டு, தாமும் கணவரும்