பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

/ 83

உள்ள குகையில் கற்படுக்கைகளும் அசோகர் காலத்துப் பிராமி எழுத்துக் களும் செதுக்கப் பட்டுள்ளன. 36

ஆறுநாட்டார் மலை:

திருச்சி ஜில்லா கரூர் தாலுகா கரூருக்குச் சில மைல் தூரத்தில் உள்ள புகழூரில் இருக்கிறது. இம்மலைமேல் சுப்பிரமணியர் கோயில் இருக்கிறது. இங்கு இயற்கையா யமைந்த குகையில் கற்படுக்கைகளும் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்களும் உள்ளன. 37

திருச்சிராப்பள்ளி:

இம்மலைமேல் பேர்பெற்ற தாயுமானவர் கோயிலும், உச்சிப் பிள்ளையார் கோயிலும் சில குகைகளும் உள்ளன. இக்குகை ஒன்றில் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் பல பாண்டவ மலைகளைக் கூறலாம். விரிவஞ்சி விடுகின்றோம். தமிழ்நாட்டில் மட்டுமன்று; ஆந்திரநாட்டிலும் பாண்டவ ഖ மலைகள் சில உள்ளன. அவற்றில் ஒன்று ராஜ மந்திரிக்கு 25 மைல் வடக்கில் உள்ள ரம்ப எர்ரபாளம் என்னும் கிராமத்தில் உள்ள குன்று களில் பாண்டவுல மெத்த என்னும் பெயரோடு ஒரு குன்று உள்ளது. இதற்கடுத்து குன்றுகளிற் பெளத்த விகாரைகளும், பள்ளிகளும் இடிந்து அழிந்து காணப்படுகின்றன. எனவே, இப்போது பஞ்சபாண்டவ மலை என்று வழங்கும் மலைகளில் பண்டைக் காலத்தில் பௌத்த பிக்குகள் வசித்து வந்தனர் என்பதும், இவற்றின் பழைய பெயர் பண்டவமலை என்பதும், பாரதக் கதையின் பஞ்சபாண்டவருக்கும் இம்மலை களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும் விளங்குகிறது.

இதுபோலவே, கழுகுமலை அல்லது கழுக்குன்றம் என்னும் பெயருள்ள மலைகளும் ஆதியில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்த இடங்களாகும். புத்தபகவான் தங்கியிருந்த ஒரு மலையின் பெயர் கிஜ்ஜகூடம் என்பது. இதுவும் மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருத நகரத்தைச் சூழ்ந்திருந்த ஐந்து மலைகளில் ஒன்று. இந்த கிஜ்ஜகூட மலையில் அநேக கழுகுகள் வசித்து வந்தன. ஆகவே கிஜ்ஜ கூடம், அதாவது 'கழுகுமலை' என்று இம்மலைக்குப் பெயர் வந்தது. பண்டவமலையில் புத்தர் தங்கியதுபோலவே, கிஜ்ஜகூட மலையிலும் அவர் அடிக்கடி சென்று தங்கியிருந்தார். இம்மலைக் குகையில்