பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

“அன்னமாய் அன்று அக்கருமறை பயந்தான்

அரங்கமா நகர் அமர்ந்தானே.

-

(5-பத்து. 7-திரு. 3)

"முன்னுலகங்களேழும் இருள் மண்டியுண்ண முதலோடு வீடுமறியாது

என்னிதி? வந்தென்ன இமையோர்திகைப்ப எழில் வேதமின்றி மறைய

பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ அன்னமதாயிருந்து அங்கற நூலுரைத்த அதுநம்மை யாளும் அரசே

“மின்னுமாமழை தவழும் மேகவண்ணா!

(11-பத்து. 4-திரு.8)

விண்ணவர்தம் பெருமானே! அருளாயென்று அன்னமாய் முனிவரோடு அமரரேத்த

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை'

-

(திருநெடுந்தாண்டகம் -30)

இன்னும் பல இடங்களில் திருமாலின் ஹம்ச ஜாதகத்தை திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். விரிவஞ்சி இத்துடன் விடுகிறோம். இதனால், புத்தரைத் திருமாலின் அவதாரமாக வைணவர்கள் ஏற்றுக்கொண்டது. போலவே, புத்தரின் அன்னப்பறவைப் பிறப்பையும் திருமாலின் ஹம்ச அவதாரமாக ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரிகிறது.

மேலே காட்டிய ஏழு கொள்கைகளும் பௌத்தமதத்தைச் சார்ந்தவை என்பதும், அக்கொள்கைகள் இந்து மதத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன. என்பதும் விளக்கப்பட்டன. இதனின்று நாம் அறியக்கிடப்பது யாது? இந்து மதம் பௌத்த மதத்தை அழித்துவிட்டது; ஆனால், பௌத்தமதக் கொள்கை களை ஏற்றுக் கொண்டு இன்றளவும் கையாண்டு வருகின்றது என்பதே. பௌத்தமதம் தோல்வியுற்றது; ஆனால், அதன் கொள்கை வெற்றிபெற்றது.