பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

கொள்கை. இக்கொள்கையை விளக்கக் கீழ்க்கண்ட வரலாறுகளே போதுமானவை.

பௌத்தர்களுக்குரிய 'சுல்லவக்க' என்னும் பாலிமொழி நூலில் இச்செய்தி காணப்படுகிறது.

பௌத்த மதத்தைச் சேர்ந்த இரண்டு பார்ப்பனத் துறவிகள் பகவன் புத்தரிடம் சென்று, 'புத்தரின் வாய்மொழிகளை வெவ்வேறு நாட்டிற் சென்று போதித்து வருகிற தேரர்கள் அந்தந்த நாட்டுத் தாய்மொழியில் உபதேசம் செய்கிறபடியால், புத்தர் மொழிகள் கெட்டுப் போகின்றன. ஆகையால், புத்தரின் உபதேசங்களைச் சந்தபாஷையில் எழுதி வைப் போமாக!' என்றனர். இங்குச் ‘சந்தம் என்பது சமஸ்கிருத சுலோகம். சமஸ்கிருத சுலோகத்தில் புத்தரின் உபதேசங்களை அமைத்து எழுத வேண்டும் என்று கூறியதாகக் கருத்து. கௌதம புத்தர் இவர்களது வேண்டுகோளினை மறுத்து, “நீங்கள் புத்தரின் வாய்மொழிகளைச் சந்த பாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாரா யிருந்தாலும் தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய் மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே அறிய வேண் டும்,” என்றனர்.

وو

இதனால் புத்தரின் விரிந்த மனப்பான்மை நன்கு விளங்குகின்றது. இந்தக் கொள்கையைப் பின்பற்றிப் பிற்காலத்துப் பௌத்தர்களும் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளில் பௌத்தக் கொள்கையைப் போதித்து வந்தனர்.

ஜைன சமயத்தவரும் இவ்வாறே பரந்த மனப்பான்மையுள்ள ள வராய், அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலேயே தங்கள் மத நூல்களை எழுதி வந்தார்கள். இதனை சித்தசேன திவாகரர் என்னும் ஜைன முனிவரின் வரலாற்றிலிருந்து நன்கறியலாம். (சித்தசேன திவாகரர் வரலாற்றைச் சமணமும் தமிழும் என்னும் நூலில் காண்க.)

இவ்வாறு, தாய்மொழி வாயிலாகத் தமது மதக்கோட் பாட்டினை உலகத்தில் பரவச் செய்யுங் கருத்துடையவரான பௌத்தர்கள் எந்தெந்த நாட்டிற்குச் சென்றார்களோ, அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகளில் மத நூல்களையும் பிறநூல்களையும் இயற்றி வைத்தார்கள். இந்த முறையில் இவர்கள் தமிழ்மொழிக்குச் செய்த, தொண்டு தமிழர்களால் மறக்கற்பாலதன்று. அன்றியும்,