பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

103

என்னும் கிருத்திய ஞானம் உண்டாகி, அதனை நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகு, துக்கங்களை வெல்லும் மார்க்க சத்தியத்தை யடைந்தேன் என்னும் கிருத ஞானம் தோன்றியது.

"பிக்குகளே! இவ்வாறு சத்தியஞானம், கிருத்திய ஞானம், கிருதஞானம் என்னும் மூன்றையும் நான்கு சத்தியத்துடன் பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டுவிதமான ஞானம் எனக்குத் தோன்றியது. இந்த ஞானம் எனக்குத் தோன்றாமல் இருந்த காலத்தில், தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலும், சிரமணரும் பிராமணரும் இருக்கிற இந்த உலகத்திலும், நான் சாமா சம்போதியை அடைந்ததாகச் சொல்லிக் கொள்ள வில்லை.’

66

وو

சத்தியஞானம், கிருத்தியஞானம், கிருதஞானம் என்கிற மூன்றை யும் நான்கு சத்தியத்தோடு பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டு விதமாக இருக்கிற இந்தத் தத்துவ ஞானத்தை நான் எப்போது அறிந்தேனோ அப்போது, தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலேயும், சிரமணர் பிராமணர் இருக்கிற இந்த உலகத்திலேயும், நான் சம்மா சம்போதியை யடைந்தேன் என்று எல்லோருக்கும் கூறினேன்.

“இந்த ஞானம் எனக்குத் தோன்றியபோது, 'நான் அடைந்த சம்போதி ஞானம் அழியாதது; இதுவே என்னுடைய கடைசிப் பிறப்பு; இனி நான் பிறக்கமாட்டேன்' என்கிற மனவுறுதி ஏற்பட்டது.

இந்த உபதேசத்தைக் கேட்ட பிறகு கொண்டஞ்ஞர் என்னும் பிக்குவுக்கு அறிவுக் கண் திறந்து அவர் ஸ்ரோதாபத்தி ஞானம் அடைந்தார்.

வாரணாசி நகரத்திலே இசிபதனத்திலே பகவன் புத்தர் திருவாய் மலர்ந்தருளிய இந்தத் தர்மோபதேசத்தைக் கேட்ட போது தேவர்களும் பிரமர்களும் முனிவர்களும் சிரமணர்களும் பிராமணர்களும் சந்தோஷ ஆரவாரம் செய்து, 'இது உண்மை, இது சத்தியம்’ என்று கூறினார்கள். இந்தச் சந்தோஷ ஆரவாரம் இம் மண்ணுலகத்தைக் கடந்து பிரம லோகம் வரையில் சென்றது. சக்கரவாளம் அசைந்து அதிர்ந்தது. தேவர்களின் தெய்வீக ஆற்றலினால் உண்டாகிற ஒளியையும் மங்கச் செய்கிற, ஆற்றல் மிக்க ஒரு பெரிய தெய்வீக ஒளி உலகம் எங்கும் தோன்றியது.