பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

புகையை உண்டாக்கினார். அதனைக் கண்ட நாகப் பாம்பு மிகவும் சினங்கொண்டு அனலைக் கக்கி வீசியது. புத்தர் தமது இருத்தி சக்தி யினாலே அனலை உண்டாக்கினார். அதனால் அந்த எக்யசாலை தீப் பற்றி எரிவது போலக் காணப்பட்டது. அதனைக்கண்ட தாபசகர்கள் "ஐயோ! அழகான தேகமுள்ள சிரமணருக்கு நாகப் பாம்பினாலே துன்பம் உண்டாகிறது” என்று பேசிக் கொண்டார்கள்.

இரவு கழிந்து பொழுது விடிந்தவுடன், ஆற்றலை இழந்து வாடிக்கிடந்த நாகப்பாம்பைப் பகவன் புத்தர் எடுத்துத் தமது பாத்திரத்தின் உள்ளே போட்டுக் கொண்டு போய், “உருவேல காசிபரே! இதோ உம்முடைய நாகப்பாம்பு. அதனுடைய ஒளி என்னுை ஒளியிலே அடங்கிப் போய்விட்டது” என்று சொல்லி அவருக்கு அதைக் காட்டினார். அதைக்கண்ட உருவேல காசிபர், "அடங்காத இருத்தி சக்தியுடைய இந்தக் கொடிய நாகப்பாம்பை அடக்கிய இந்தச் சிரமணர் அதிக இருத்தி சக்தியுள்ளவரே. ஆனால், இவர் என்னைப் போன்று அர்ஹந்த நிலையை யடைந்தவர் அல்லர்” என்று தமக்குள் நினைத்துக் கொண்டார்.

உருவேல காசிபர்

உருவேல காசிபரின் எண்ணத்தை அறிந்த பகவன் புத்தர், மற்றும் சில இருத்திகளைச் செய்து காட்டினார். அப்போது காசிபர் அவரைப்பற்றித் தவறாகக் கருதிக் கெண்டிருந்த எண்ணத்தை நீக்கிப் பகவன் புத்தரிடம் தருமோபதேசம் கேட்டுப் பௌத்தரானார். அவருடன் இருந்த சீடர்களும் பௌத்தர் ஆயினர். பிறகு, அந்தச் சடிலர்கள் எல்லோரும் பகவன் புத்தரிடம் ஏஹிபிக்ஷவிதமாகச் சந்நியாசமும் உபசம்பதாவும் பெற்றார்கள்.

நதி காசிபர்

உருவேல காசிபரும் அவருடைய சீடர்களும் பௌத்தராகிச் சந்நியாசம் பெற்றபோது, தங்களுடைய சடைகளை மழித்துத் துணி மணி முதலிய பொருள்களை நதியிலே போட்டார்கள். நேரஞ்சர நதிக் கரையிலே இன்னொரு இடத்தில் இருந்த நதிகாசிபர், ஆற்றிலே போகிற இந்தப் பொருள்களைக் கண்டு, தமது தமையனாருக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ என்று ஐயம் அடைந்து, தமது சீடர்களுடன் புறப்பட்டுத் தேடிவந்தார். வந்த அவர், தமது தமையனாரும் அவர்