பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

115

சீடர்களும் பௌத்த சந்நியாசிகளாக இருப்பதைக் கண்டு, “இந்தத் துறவு நிரம்ப நல்லதா?” என்று கேட்டார்.

66

மாம், தம்பி! தாபச சந்நியாசத்தைப் பார்க்கிலும் இந்தச் சந்நியாசம் உத்தமமானது” என்று உருவேல காசிபர் கூறினார். இதைக் கேட்டு நதிகாசிபரும் அவரது சீடர்களும் தங்களுடைய சடைமுடி முதலியவைகளைக் களைந்து ஆற்றிலே போட்டுவிட்டுப் பகவன் புத்தரிடம் சென்று தர்மோபதேசங் கேட்டார்கள். புத்தர் அவர்களுக்கு உபதேசம் செய்து, அவர்கள் வேண்டுகோளின்படி ஏஹிபிக்ஷ£ சந்நியாசம் கொடுத்தார்.

கயா காசிபர்

ס

இவர்கள் ஆற்றில் எறிந்த சடைமுடி முதலிய பொருள்கள் ஆற்றிலே போவதைக் கண்ட மூன்றாவது சகோதரராகிய கயா காசிபர், தமது தமையனாருக்கு ஏதோ தீங்கு நேரிட்டதுபோலும் என்று கருதி, சீடர் களுடன் புறப்பட்டு வந்தார். வந்து, அவர்கள் பௌத்தத் துறவிகளாக இருப்பதைக் கண்டு, “தாபச சந்நியாசத்தைவிட இந்தச் சந்நியாசம் உத்தமமானதா?” என்று வினவினார். “ஆமாம்! இந்தச் சந்நியாசம் அதைவிட உயர்ந்தது, மேலானது!” என்று அவர்கள் கூறினார். இதைக் கேட்ட கயாகாசிபரும் தமது சீடர்களுடன் சடா முடி முதலியவற்றைக் களைந்துபோட்டுத் தர்மோபதேசங் கேட்டுப்பௌத்த துறவியானார்கள்.

ஆதித்த பரியாய சூத்திரம்

பகவன் புத்தர் சிலநாள் அங்குத் தங்கியிருந்த பின்னர், தமது ஜடாதர சீடர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு கயா நகரத்தின் பக்கமாகச் சென்றார். அங்குச் சென்று ஒரு பாறையின் மேலே அமர்ந்து, தமது சீடர்களுக்கு ஆதித்த பரியாய சூத் திரத்தை உபதேசம் செய்தார். அச் சூத்திரத்தின் சுருக்கம் இது: உலகத்தில் எல்லாப் பொருள்களும் தீப்பற்றி எரிகின்றன. கண் என்னும் பொறி தீப்பற்றி எரிகிறது. ரூபம் உருவம் என்னும் தீயினாலே சக்ஷு விஞ்ஞானத்தைத் தீப்பிடித்து இருக்கிறது. சக்ஷ ஸ்பர்ஸ மூலமாக வருகின்ற சுகம் துக்கம் உபேக்ஷை என்கிற மூன்றுவிதமான வேதனை நெருப்பினாலே தீப்பற்றி எரிகிறது.

66

'இவ்வாறே ஐம்புலன்களிலும் தீப்பற்றி எரிகிறது. எந்த விதமான தீ என்று கேட்கிறீர்களா? ராகத் தீ, துவேஷத் தீ, பிறப்பு, நரை, திரை,