பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

118

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

பகவன் புத்தர் அரண்மனைக்குச் சென்று தமக்காக அமைத்திருந்த ஆசனத்தில் பிக்கு சங்கத்தோடு இருந்தார். அரசர் அவர்களுக்கு அறுசுவை உணவை அன்போடு அளித்தார். பகவர், பிக்குகளுடன் உணவு அருந்திய பிறகு, விம்பசார அரசன் ஒருபுறத்தில் உட்கார்ந்து 'சுவாமி! புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணி யிலிருந்து நான் விலகி வாழமுடியாது. நான் அடிக்கடி பகவரிடம் வந்து திருவாய்மொழி கேட்க வேண்டும். பனைவனம் வெகுதூரத்தில் இருக்கிறது. வெளுவனம் (வெளுவனம் என்றாலும் வேணுவனம் என்றாலும் ஒன்றே. மூங்கில் வனம் என்பது பொருள்) இடைவழியில் இருக்கிறது. அதிக ஜனக் கூட்டம் இல்லாத அமைதியான இடம் அது. அந்த வனத்தைப் பகவர் ஏற்றுக்கொண்டு அங்கு எழுந்தருளியிருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, பொற்கிண்டியிலிருந்து நீரைத் தாரைவார்த்து வெளு வனத்தைப் பகவருக்குத் தானம் செய்தார். பகவன் புத்தர் அதனை ஏற்றுக்கொண்டு பிக்கு சங்கத்தாருடன் வெளுவனத்துக்குச் சென்றார். (வெளுவனத்திலே புத்தர் அடிக்கடி வந்து தங்கிப் பலருக்குத் தாமோபதேசஞ் செய்திருக்கிறார்).

சாரிபுத்த மொக்கல்லானர்

""

அக்காலத்திலே இராசகிருக நகரத்திலே இருநூற்றைம்பது பரி விராசகர்களுக்குத் தலைவனான சஞ்சயன் என்னும் பரி விராசகன் ஒரு கிராமத்திலே தங்கியிருந்தான். இராசகிருக நகரத்துக்கு அருகிலே உபதிஸ்ஸ கிராமம், கோலித கிராமம் என்னும் இரண்டு கிராமங் களுக்குத் தலைவர்களாக இரண்டு பிராமணர்கள் இருந்தார்கள்: அவர் களுக்கு ஒவ்வொரு ஆண்மகவு பிறந்தது. அக் குழந்தைகளுக்கு அக் கிராமத்தின் பெயரையே உபதிஸ்ஸன், கோலிதன் என்று சூட்டினார்கள். இக் குழந்தைகள் வளர்ந்து இளமையிலேயே சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து இல்லற வாழ்க்கையை வெறுத்துச் சஞ்சயப் பரிவிராசகனிடஞ் சென்று சீடர்களாகி அவரிடம் துறவு பெற்றார்கள்.

ஆனால், இவ்விருவரும் சஞ்சயருடைய போதனையில் திருப்தியடையாமல் தமக்குள் இவ்வாறு பேசிக் கொண்டார்கள்: “நாம் இருவரும் அமிர்த தருமத்தைத் தேடவேண்டும்; அது யாருக்கு முதலில் கிடைக்கிறதோ அவர் மற்றவருக்குச் சொல்ல வேண்டும் இவ்வாறு தமக்குள் தீர்மானித்துக்கொண்டு அவர்கள் பரதக்கண்டம் முழுவதும் சுற்றித்திரிந்து மீண்டும் இராசகிருக நகரத்துக்கு வந்தார்கள்.