பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

125

மாமனாரான சுத்தோதன அரசரிடம் போய், “தங்களுடைய குமாரர் தெருவழியே பிக்ஷை எடுத்துக் கொண்டே போகிறார்" என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட அரசர் திடுக்கிட்டெழுந்து விரைந்து சென்று பகவன் புத்தர் முன்னிலையில் நின்று, "சுவாமி! நமக்கு ஏன் வெட்கத்தை உண்டாக்குகிறீர். எதற்காகப் பிக்ஷை ஏற்கிறீர். பிக்ஷுக் களுக்கு அரண்மனையில் ஆகாரம் கொடுக்க முடியாது என்று ஜனங் களுக்குத் தெரிவிக்கிறீர்களா?” என்று கேட்டார்.

அப்போது பகவன் புத்தர், “மகாராசரே! இது நமது பரம்பரை வழக்கம்” என்று விடை கூறினார்.

இதைக் கேட்டு வியப்படைந்த சுத்தோதன அரசர், “சுவாமி! நமது பரம்பரை என்றால், மகாசம்பிரத க்ஷத்திரிய ராஜவம்சம். இதில் பிக்ஷைக்குப் போன அரசர் ஒருவரும் இருந்ததில்லை” என்று கூறினார்.

"மகாராசரே! தாங்கள் கூறுவது தங்களுடைய பரம்பரை. நமது பரம்பரை என்றால், தீபாங்கரர், கொண்டஞ்சர் முதலான புத்தர் களுடைய பரம்பரை, அந்தப் புத்தர்களும் அவர்களுக்கு முன்பிருந்த ஆயிரக்கணக்கான புத்தர்களும் பிக்ஷையாசித்து வாழ்ந்தார்கள் என்று அருளிச் செய்தார்.

பிறகு, அரசர், பகவன் புத்தர் கையிலிருந்த பிக்ஷா பாத்தி ரத்தைத் தமது கையில் வாங்கிக் கொண்டு புத்தரையும் பிக்குச் சங்கத்தாரையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சென்று அரண்மனையிலே எல்லோருக்கும் உணவு கொடுத்து உண்பித் தார். உணவு சாப்பிட்டான பிறகு பகவர், அவருக்கு அனுமோதனா உபதேசம் செய்தார். அதனைக் கேட்ட அரசர் சக்ருதாகாமி நிலையை அடைந்தார். அவருடன் இருந்து உபதேசம் கேட்ட பிரஜா கௌதமியும் ஸ்ரோதாபத்தி நிலையைப் பெற்றார்.

யசோதரையார்

யசோதரைத் தேவியார் பகவன் புத்தரைப் பார்க்கவரவில்லை. பகவன் புத்தர், தமது பிக்ஷைப் பாத்திரத்தைத் சுத்தோதன அரசரிடம் கொடுத்து யசோதரையாரிடம் கொண்டுபோகச் சொல்லித் தாமும் அவரைப் பின் தொடர்ந்தார். பகவன் புத்தர் தமது இருப்பிடத்திற்கு வருவதையறிந்த யசோதரையார் எதிர் சென்று, அவர் பாதத்தில்