பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

சுத்தோதனர் மோக்ஷம்

சில காலஞ் சென்றபிகு சுத்தோதன அரசர் நோய் வாய்ப் பட்ட செய்தி அறிந்த பகவன் புத்தர் சில பிக்குகளுடன் புறப்பட்டுத் தமது இருத்தியினாலே ஆகாயத்தில் பறந்து சென்று நோயாய்க்கிடந்த அரசருக்கு நிலையாமை என்பது பற்றி அறவுரை வழங்கினார். அதனைக் கேட்ட அரசர் அர்ஹந்த நிலை யடைந்து புத்தரைத் தொழுது நிர்வாண மோக்ஷம் அடைந்தார்.

சுத்தோதன அரசர் இறந்த பிறகு, பகவன் புத்தரின் இளைய தாயாரான பிரஜா கௌதமி தேவியார், துறவு கொள்ள விரும்பினார். அவர் ஆலவனத்தில் தங்கியிருந்த பகவரிடம் வந்து தமக்குச் சந்நியாசம் கொடுத்துப் பிக்குணியாக்கும்படிக் கேட்டுக்கொண்டார். மகளிரைப் பௌத்தப் பிக்ஷு சங்கத்தில் சேர்க்க விருப்பம் இல்லாத படியால் பகவர், அவருக்கு சந்நியாசம் கொடுக்க மறுத்து வைசாலி நகரத்திற்குப் போய்விட்டார்.

பிக்ஷக்ஷிணிச் சங்கம்

ס.

ஆனால், பிரஜா கௌதமி தேவியாரும் மற்றும் சில ஸ்திரீகளும் தலைமயிரைச் சிறைத்துக்கொண்டு, மஞ்சள் ஆடை அணிந்து, கால் நடையாக வைசாலி நகரத்திற்குப் பகவரை நாடிச் சென்றார்கள். வழி நடந்ததால் கால்கள் வீங்க, புழுதி படிந்த ஆடையுடன் அவர்கள் அழுதுகொண்டே பகவன் புத்தர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பகவரின் அணுக்கத் தொண்டரான ஆனந்தமகாதேரர் கண்டு, அவர்களிடம் சென்று, அவர்கள் வந்த காரணத்தை யறிந்து, பகவன் புத்தரிடம் சென்று செய்தியைக் கூறி, அவர்களுக்காகப் பரிந்து பேசினார்.

பகவர், தமது பௌத்தச் சங்கத்தில் மகளிரைச் சேர்க்க விரும்ப வில்லை. ஆனால், ஆனந்த மகாதேரர், பிரஜா கௌதமியார் புத்தருடைய குழந்தைப் பருவத்தில் அவரைப்போற்றி வளர்த்ததைச் சுட்டிக்காட்டி, அவரைச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டினார். அதன்மேல் பகவர் பிக்குணிகளுக்கென்று எட்டுவிதமான கடமைகளை வகுத்து அக்கடமைகளை ஏற்றுக்கொண்டால் பிக்குணிகள் சங்கத்தில் சேரலாம் என்று உத்தரவு கொடுத்தார். அந்தக் கடமைகளை ஏற்றுக் கொண்டபடியால் அந்த ஸ்திரீகள், சங்கத்தில் பிக்குணிகளாகச் சேர்க்கப்பட்டனர்.