பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

நிலத்தை உழுது பண்படுத்துகிறேன். நீர் பாய்ச்சிக்களை பிடுங்கு கிறேன். இவ்வாறு பயிர் செய்து உயிர் வாழ்கிறேன். தாங்களும் ஏன் பயிர் செய்து உண்டு வாழக் கூடாது?” என்று வினவினான்.

இதனைக் கேட்ட பகவர், “நானும் உழுது விதைத்துப் பயிர் செய்து உண்டு வாழ்கிறேன்?" என்று கூறினார்.

இதைக் கேட்டு வியப்படைந்த பார்ப்பனன், “வணக்கத்திற்குரிய கௌதமரே! உம்மிடம் ஏர், எருதுகள் முதலியவை இல்லையே! தாங்கள் எப்படிப் பயிர் செய்கிறீர்கள்?” என்று கேட்டான். கௌதமபுத்தர், இவ்வாறு விடை கூறினார்: “உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை. ஊக்கமும் முயற்சியும் எருதுகள்; துக்கமற்ற இன்பநிலையே நான் அறுக்கும் அறுவடை.

இதைக் கேட்ட பாரத்துவாஜன் மனம் மகிழ்ந்து பௌத்த தர்மத்தை மேற்கொண்டு வாழ்ந்தான்.

சுப்ரபுத்தன் நரகம் அடைந்தது

ததாகதர் போதிஞானம் அடைந்த பதின்மூன்றாம் ஆண்டில் பகவன் புத்தர் ஜேதவனத்தில் தங்கியிருந்த போது, இராகுல தேரருக்கு இருபது வயது நிரம்பிற்று. அதனால், அவருக்கு உபசம்பதா துறவு கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு பகவர் கபிலவத்து நகரம் சென்றார்.

"

பகவர் ஆலவனத்திலே தங்கியிருந்தபோது ஒருநாள், அவருடைய மாமனாராகிய சுப்ரபுத்தர், ததாகதரை இழிவாகப் பேசி அவமானப் படுத்தினார். சுப்ரபுத்தர், தன் மகளாகிய யசோதரையாரை விட்டுப் போய்த் துறவுபூண்ட ததாகதரிடம் சினமும் பகையும் கொண்டிருந்தார். ஆகவே அவர், ஆலவனத்தில் ததாகதர் தங்கியிருந்தபோது, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்னும் கருத்தோடு குடித்து வெறி கொண்டு ததாகதரிடம் சென்றார். அப்போது ததாகதர் பிக்ஷைக்காக நகரத்தின் தெருவிலே நடந்துகொண்டிருந்தார். சுப்ரபுத்தர், ததாகதரை மறித்துத் தடுத்துப் பலவகையாக ஏசி இகழ்ந்து பேசினார். அவருடைய நிந்தனைகள் கட்டுக்கடங்காமல் அளவுக்குமீறிச் சென்றன. அப்போது ததாகதர் அமைதியாகப் பக்கத்திலிருந்த ஆனந்த தேரரைப் பார்த்து, “சுப்ரபுத்தரை ஒரு வாரத்திற்குள் பூமி விழுங்கி விடும்” என்று தீர்க்க தரிசனம் கூறினார். அதைக்கேட்ட சுப்ரபுத்தர் எள்ளி நகைத்து மேன் மேலும் தூற்றினார். பிறகு, ததாகதரின் தீர்க்க தரிசனத்தை நினைத்து