பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

பாறையை உருட்டியது

பிறகு தேவதத்தன் பகவன் புத்தரைக் கொல்ல வேறு முறையைக் கையாண்டான். பகவன் புத்தர் கிருத்திரக்கூடமலையின் (கழுகுமலை யின்) அடிவாரத்தில் உலாவுகிற வழக்கப்படி, ஒரு நாள் மாலையில் உலாவும்போது, தேவதத்தன் மலையுச்சியி லிருந்து பெரிய பாறைக் கல்லை உருட்டிப் பகவன் புத்தர்மேல் தள்ளினான். மலையுச்சிலிருந்து வேகமாக உருண்டுவந்த அந்தப் பாறைக்கல், நல்லவேளையாக, இரண்டு பாறைகளுக்கு இடையில் அகப்பட்டு நின்றுவிட்டது. அதிலிருந்து சிதறிவந்த சிறு கல் துண்டு பட்டுப் பகவரின் காலில் காயம் ஏற்பட்டது. பிக்குகள், ஜீவகன் என்னும் மருத்துவனைக்கொண்டு காயத்திற்கு மருந்து இட்டு ஆற்றினார்கள். அன்றியும், இனி மலையடிவாரத்திற்கு னி உலாவப் போகக்கூடாது என்றும் பகவரிடம் கூறினார்கள். அதற் குப் பகவன் புத்தர், "ததாகதரின் உயிரைப் போக்க ஒருவராலும் இயலாது. ததாகதருக்குக் காலம் வரும்போதுதான் அவர் உயிர் பிரியும்” என்று கூறி அவர்களின் அச்சத்தை நீக்கினார்.

யானையை ஏவியது

தேவதத்தன் அதனோடு நின்றுவிடவில்லை. நாளாகிரி என்னும் பெயருடைய யானைக்கு மதமூட்டிக் கோபங் கொள்ளச் செய்து பகவன் புத்தர் இராசவீதி வழியே வரும்போது அந்த மத யானையை அவர் மேல் ஏவிவிட்டான். இராசகிருக நகரத்தின் விதியில் அந்த மதயானை மூர்க்கத்தனமாக வெறிகொண்டோடி யது. அதனைக் கண்ட ஜனங்கள் அஞ்சி ஓடினார்கள். மதயானை, பகவன் புத்தரின் அருகில் வந்தபோது, அவருடைய திருமேனியில் இருந்து வெளிப்படும் தெய்விக ஒளி யினால், அதன் மதம் அடங்கிக் கோபம் தணிந்து சாந்தம் அடைந்தது. அது, தும்பிக் கையைத் தாழ்த்திப் பகவருக்குத் தலை வணங்கிற்று. பிறகு சாந்தமாகத் திரும்பிப் போய்விட்டது. இவ்வாறு தேவதத்தன், பகவன் புத்தரைக் கொல்லச் செய்த சூழ்ச்சிகளும் முயற்சிகளும் பயன்படாமற் போயின.

பிளவு உண்டாக்கியது

தனது சூழ்ச்சிகள் நிறைவேறாமற் போகவே தேவதத்தன் வேறு விதமாகச் சூழ்ச்சி செய்தான். பௌத்தச் சங்கத்திலே பிளவு உண்டாக்கி அதனால் வெற்றியடையலாம் என்று எண்ணினான். பௌத்த சங்கப் பிக்குகளில் தன் பேச்சைக் கேட்கக்கூடிய சிலரை அழைத்து, பகவன்