பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

66

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

‘அந்த விதமாகத்தானே ததாகதருடைய உடம்பையும் அடக்கம் செய்யவேண்டும். அங்கு யாரேனும் வந்து தூபம் தீபங்கள் வைத்துப் பூக்களைத் தூவி வணங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் நன்மையும் உண்டாகும்.”

66

'ஆனந்த! கல்லினால் நினைவுச் சின்னம் கட்டி அமைக்கப் பட வேண்டியவர்கள் நான்குபேர் உள்ளனர். அந்த நால்வர் யார்? ததாகதராகிய புத்தர்கள், பிரத்தியேக புத்தர்கள், அர்ஹந்தர்கள், அரசச் சக்கரவர்த்திகள். இந்த நான்கு வகையானவர்களுக்கு சேதி யங்கள் அமைக்கப்பட வேண்டும்” என்று பகவன் புத்தர் கூறினார்.

கடைசி இரவு

பகவன், புத்தர், பிறகு ஆனந்தரை அழைத்துக் குசிநகரத்துக்குச் சென்று அந் நகரத்து மள்ளர்களுக்குத் தாம் பரி நிர் வாணம் அடையப் போவதைச் சொல்லி வரும்படி அனுப்பினார்: "இன்று இரவு கடையாமத்திலே ததாகதர் பரி நிர்வாணம் அடையப்போகிறார். ‘ததாகதர் நமது நாட்டுக்கருகில் வந்து பரி நிர்வாணம் அடைந்தபோது நாம் அவ்விடம் இல்லாமற் போனோமே' என்று பிறகு நீங்கள் வருந்த வேண்டாம். இச் செய்தியை யறியுங்கள்" என்று நகரத்தாருக்குச் சொல்லிவிட்டு வரும்படி அனுப்பினார்.

ஆனந்ததேரரும் இன்னொரு தேரரும் புறப்பட்டுக் குசிநகரம் சென்றார்கள். அப்போது நகர மண்டபத்திலே மள்ளர்கள் ஏதோ காரணமாகக் கூட்டங்கூடியிருந்தார்கள். அவர்களிடம் சென்று பகவன் கூறிய செய்தியை ஆனந்த தேரர் கூறினார். இதைக் கேட்ட மள்ளர்கள் வருத்தம் அடைந்தனர். இச் செய்தி உடனே நகரமெங்கும் பரவியது. முதியவரும் இளையவரும் பெண்களும் குழந்தைகளும் அழுது புலம்பினார்கள். “பகவன் புத்தர் இவ்வளவு சீக்கிரத்தில் பரி நிர்வாணம் அடையப்போகிறார்” என்று கூறித் துன்பம் அடைந்தார்கள். பிறகு மள்ளர்களுள் ஆண்களும் பெண் களும் முதியவரும் குழந்தைகளும் எல்லோரும் உபவர்த்தன வனத்திற்கு வந்தார்கள்.

அப்போது ஆனந்தமகாதேரர் தமக்குள் இவ்வாறு கருதினார். "மள்ளர்களை ஒவ்வொருவராகப் பகவரைத் தரிசிக்க அனுப்பினால் பொழுதுவிடிந்துவிடும். ஆகையால் குடும்பம் குடும்பமாக அவர்களை அனுப்புவது நல்லது” என்று எண்ணி, ஒவ்வொரு குடும்பமாக உள்ளே வரச்சொல்லிப் பகவன் புத்தரிடம், “இன்ன பெயருள்ள மள்ளர் தமது