பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

149

அப்போதும் பிக்குகள் வாளா இருந்தார்கள். அப்போது ஆனந்த மகாதேரர் பகவரை நோக்கி, “பகவரே! அதிசயம், இது மிக்க அதிசயம்! இந்தப் பிக்ஷு சங்கத்திலே புத்த, தர்ம, சங்கங்களைப்பற்றி யாருக்கும் எந்தவிதமான ஐயமும் இல்லை" என்று கூறினார்.

66

ס.

ஆனந்த! இந்த ஐந்நூறு பிக்குகள் எல்லாரும் நிர்வாண மோட்சம் அடைவார்கள். நிர்வாண மோட்சம் அடையாத பிக்குகள் இந்தச் சங்கத்தில் ஒருவரும் இல்லை” என்று அருளிச் செய்தார். அதன் பிறகு பகவன் புத்தர் பிக்குகளைப் பார்த்துக் கூறினார். "பிக்குகளே! ஐம் பூதங்களின், சேர்க்கையால் உண்டான பொருள்கள் அழிந்துவிடும் என்னும் உண்மையைத் தவிர ததாகதர் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆகவே, நிர்வாண மோட்சம் பெறுவதற்கு ஊக்கத் தோடும் உறுதியோடும் முயற்சி செய்யுங்கள் என்று அருளிச்செய்தார். இதுவே பகவரின் கடைசி போதனையாகும். பரி நிர்வாணம்

பிறகு பகவன் புத்தர் தியானத்தில் அமர்ந்து முதல் நிலையை (பேரானந்த நிலையை) யடைந்தார். பிறகு, முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலையையடைந்தார். இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலையையடைந்தார். பின்னர் மூன்றாம் நிலையிலிருந்து நான்காம் பேரானந்த நிலையை யடைந்தார். அந்நிலையிலிருந்து எல்லையற்ற பரவெளியை யடைந்தார். அந்நிலையிலிருந்து சூனியநிலையை யடைந்தார். பிறகு அந்நிலையிலிருந்து அதற்கு மேற்பட்ட நிலை ையடைந்தார்.

அப்போது அனந்த மகாதேரர் அனுருத்தமகாதேரரிடம் “அனுருத்த தேரரே, பகவன் புத்தர் நிர்வாண மோட்சம் அடைந்தார்” என்று கூறினார்.

“இல்லை, ஆனந்த தேரரே, பகவன் புத்தர் இன்னும் நிர் வாண மோட்சம் அடையவில்லை. அவர் தியானத்தின் மிக உயர்ந்த எல்லை யில் இருக்கிறார்” என்று அனுருத்தர் கூறினார்.

அப்போது பகவன் புத்தர் யோகத்தின் மிக உயர்ந்த நிலையிலிருந்து படிப்படியாகக் கீழிறங்கி நான்காம் நிலைக்கு வந்து, அதிலிருந்து இறங்கி மூன்றாம் நிலைக்கு வந்து பிறகு இரண்டாம் நிலைக்கும் முதல் நிலைக்கும் வந்தார். பிறகு, மீண்டும், யோகத்தின் முதல் நிலைக்குச்