பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

12. வான் ஆடும் பரியாயும், அரிண மாயும்,

வனக்கேழல் களிறாயும், எண்காற் புள்,மான் தானாயும், பணைஎருமை ஒருத்த லாயும்,

தடக்கை யிளங் களிறாயும், சடங்க மாயும், மீனாயும்,முயலாயும், அன்ன மாயும்,

மயிலாயும், பிறவாயும், வெல்லுஞ்சிங்க மானாயும் கொலைகளவு கள்பொய் காமம் வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே.

13. வண்டுளங்கொள் பூங்குழலாள் காதலனே உன்றன்

14.

15.

மக்களைத்தா சத்தொழிற்கு மற்றொருத்த ரில்லென்(று) எண்டுளங்கச் சிந்தையளோர் பார்ப்பனத்தி மூர்க்கன் இரத்தலுமே நீர்கொடுத்தீர் கொடுத்தலுமத் தீயோன்

கண்டுளங்க நும்முகப்பே யாங்கவர்கள் தம்மைக் கடக்கொடியாலே புடைத்துக் கானகலும் போது மண்டுளங்கிற் றெங்ஙனே நீர்துளங்க விட்டீர்

மனந்துளங்கு மாலெங்கள் வானோர் பிரானே,.

கூரார் வளைவுகிர் வாளெயிற்றுச் செங்கண்

கொலையுழுவை காய்பசியால் கூர்ந்தவெந்நோய் நீங்க

ஓரா யிரங்கதிர்போல் வாள்விரிந்தமேனி

உளம்விரும்பிச் சென்றாங்கியைந்தனைநீ யென்றால்

காரார் திரைமுளைத்த செம்பவளம் மேவுங்

கடிமுகிழ்த்த தண்சினைய காமருபூம் போதி

ஏரார் முனிவர்கள் வானவர்தங் கோவே!

ஏந்தாய்! அகோ! நின்னை ஏத்தாதார் யாரே!

வீடுகொண்ட நல்லறம் பகர்ந்துமன் பதைக்கெலாம்

169

விளங்கு திங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன் மோடுகொண்ட வெண்ணுரைக் கருங்கடல் செழுஞ்சுடர்

முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின் நாடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான

ஐந்தொடங்கொர் மூன்றறுத்த நாதணாள் மலர்த்துணர்ப்

பீடுகொண்ட வார்தளிர்ப் பிறங்குபோதி யானையெம்

பிரானைநாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே.