பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

16. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக உருமேவி யவதரித்த உயிரனைத்து முயக்கொள்வான் இவ்வுலகுங் கீழுலகும் மிசையுலகும் இருணீங்க எவ்வுலகுந் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடரென்ன விலங்குகதிர் ஓரிரண்டு விலங்கிவலங் கொண்டுலவ அலங்குசினைப் போதிநிழல் அறமமர்ந்த பெரியோய்நீ.

(தாழிசை)

மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இரும்புயங்கள் மாரவனி தையர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே! வேண்டினர்க்கு வேண்டினவே யளிப்பனென மேலைநாள் பூண்டவரு ளாளநின் புகழ்புதி தாய்க் காட்டாதோ!

உலகுமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறியழுங்கப் புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே! பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய திருமேனி மாதவனீ என்பதற்கோர் மறுதலையாக் காட்டாதோ!

கழலடைந்த வுலகனைத்தும் ஆயிரவாய்க் கடும்பாந்தள் அழலடைந்த பணத்திடையிட் டன்றுதுலை ஏறினையே!

மருள்பாரா வதமொன்றே வாழ்விக்க கருதியநின் அருள்பாரா வதமுயிர்க ளனைத்திற்கு மொன்றாமோ!

(அராகம்)

அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை எரிசுடர் மரைமலர் எனவிடு மடியினை.

அகலிடம் முழுவதும் அழல்கெட வமிழ்துமிழ் முகில்புரி யிமிழிசை நிகர்தரு மொழியினை.

(ஈரடி அம்போதரங்கம்)

அன்பென்கோ ஒப்புரவென்கோ ஒருவ னயில்கொண்டு

முந்திவிழித் தெறியப்பால் பொழிந்தமுழுக் கருணையை.