பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

யையும் மாயாதேவியாரையும் கபிலவத்து நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

போதிசத்துவர் பிறந்தருளிய அதே வேளையில் யசோதரை தேவியாரும், சன்னன், காளுதாயி என்பவர்களும் தோன்றினர்; கந்தகன் என்னும் குதிரையும், போதிமரமும், நான்கு நாழி நிதிக்குவிய லும் தோன்றின.

அசிதமுனிவர் கூறியது

சுத்தோதன

அரசருடைய தகப்பனாரான சிங்கஹணு அரசருக்கு அசிதர் என்னும் பெயருள்ள புரோகிதர் ஒருவர் இருந்தார். இந்தப் புரோகிதர்தான் சுத்தோதன அரசருக்கு அவர் சிறுவராக இருந்தபோது வில்வித்தை முதலிய கலைகளைக் கற்பித்தார். சிங்கஹணு அரசர் காலஞ் சென்ற பிறகு அசிதர் தமது புரோகிதத் தொழிலை விட்டு, அரசருடைய ஆராமத்தோட்டத்திலே தபசு செய்துகொண்டிருந்தார். அசித முனிவர் ஐந்து விதமான அபிக்ஞைகளையும் எட்டு விதமான சமாபத்திகளையும் அடைந்தார். சில வேளைகளில் இவர் தமது சித்தியினாலே தேவ லோகத்திற்குப் போய் அங்குத் தங்கித் தபசு செய்துவிட்டு மீண்டும் தமது இடத்திற்குத் திரும்பி வருவது வழக்கம்.

போதிசத்துவர் மாயாதேவியார் திருவயிற்றிலே தங்கிக் குழந்தை யாகத் திருவவதாரம் செய்திருப்பதை அசித முனிவர் அறிந்து, அக் குழந்தையைக் காண்பதற்காக அரண்மனைக்கு வந்தார். சுத்தோதன அரசர், முனிவரை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்து வணங்கி நின்றார். அப்போது அசித முனிவர், “அரச! உமக்கு ஆண் மகன் பிறந்த செய்தி அறிந்து இவ்விடம் வந்தேன். அக் குழந்தையை நான் பார்க்க வேண்டும்." என்று கூறினார். இதைக் கேட்ட அரசர் தாமே தமது கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு வந்து முனிவருக்குக் காட்டி, "மகனே! முனிவரை வணங்கி நற்பேறு பெறுக." என்று கூறினார். அப்போது குழந்தை யின் பாதங்கள் தற்செயலாக முனிவருடைய தலையில் பட்டன. ஏனென்றால், போதிசத்துவர்கள் புத்த நிலையை யடைகிற பிறப்பிலே பிறரை வணங்குவது மரபன்று. இதனை ஞானக் கண்ணினால் அறிந்த அசித முனிவர், உடனே ஆசனத்தை விட்டு எழுந்து நின்று குழந்தையைக் கைகூப்பி வணங்கினார். முனிவர்