பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

27

இவ்வாறு நிமித்திகர் சொன்னதைக் கேட்ட சுத்தோதன அரசர், தமது குமாரன் சக்கரவர்த்தியாக விளங்கவேண்டும் என்று விரும்பி, தனது மகனை இல்லறத்திலேயே நிற்கச் செய்வதற்கு வேண்டிய உபாயங்களை யெல்லாம் யோசித்தார். 'தொண்டு' கிழவர்களும் நோயாளிகளும் பிணங்களும் சந்நியாசிகளும் சித்தார்த்த குமாரனுடைய பார்வையில் படாதபடித் தடுக்க நான்கு திசைகளிலும் நான்கு மைல் தூரம் காவலாளி களை ஏற்படுத்தினார்.

எட்டு நிமித்திகர்களில் இளைஞரான கொண்டஞ்ஞரைத் தவிர மற்ற ஏழு நிமித்திகரும் தமது பிள்ளைகளை அழைத்து, “சுத்தோதன அரசரின் மகனான சித்தார்த்த குமாரன் புத்த பதவியை அடைவார். அப்போது நாங்கள் உயிருடன் இருப்போமோ மாட்டோமோ, தெரியாது. னால், நீங்கள் அவரிடஞ் சென்று அவர் உபதேசத்தைக் கேட்டு அவருடன் துறவு கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

பின்னர் இந்த ஏழு நிமித்திகரும் காலப்போக்கில் காலஞ் சென்று விட்டார்கள். இளைஞராக இருந்த கொண்டஞ்ஞர் காலப்போக்கில் பெரியவராகிப் பிறகு கிழவராக இருந்தார். சித்தார்த்த குமாரன், துறவு பூண்டார் என்னும் செய்தியைக் கேட்டு, கொண்டஞ்ஞர், ஏழு நிமித்திகரின் குமாரர்களிடம் சென்று தாம் புத்தரிடம் உபதேசம் பெறப் போவதாகக் கூறி அவர்களையும் தம்முடன் வரும்படி அழைத்தார். அவர்களில் மூவர் இணங்கவில்லை. நால்வர் மட்டும் இசைந்து கொண்டஞ் ஞருடன் சென்றார்கள். இந்த ஐவரும் முதன் முதலில் புத்தரிடம் ஞானோபதேசம் பெற்றுப் பௌத்தரானார்கள்.)

சுத்தோதன அரசன், தனக்குக் குழந்தை பிறந்ததற்காக மகிழ்ந்து ஏராளமான பொன்னையும் பொருளையும் வழங்கித் தான தருமங்கள் செய்தார்.

சித்தார்த்த குமாரன் பிறந்த ஏழாம் நாள் மாயா தேவியார்

காலமானார்.

உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல் ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின் ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்

995