பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

35

ஆசனத்தில் அமர்ந்தார். நாட்டிலுள்ள உயர்குடிப் பெண்கள் எல்லோரும் அரண்மனைக்கு வந்தார்கள். வந்து ஒவ்வொருவராக அரச குமாரனை அணுகிப் பரிசுகளைப் பெற்றுச் சென்றார்கள். அரச குமாரனுடைய கம்பீரமான தோற்றத்தையும் அழகையும் கண்ட அம்மங்கையர் எல்லோரும், அரசகுமாரனை நேரே முகத்தைப் பாராமல் தலை குனிந்தவண்ணம் சென்று வணக்கம் செய்து அவர் கொடுத்த பரிசைப் பெற்றுக் கொண்டு போனார்கள். இவ்வாறு பரிசு நகைகள் எல்லாம் வழங்கப்பட்டன.

கடைசியாக, சாக்கிய குலத்து மகாநாமர் என்பவர் மகளான யசோதரை என்னும் கன்னிகை தாதியர் சூழ அவ்விடம் வந்தார். வந்து அரச குமாரனை அணுகி, அவருடன் நெடுநாள் பழகியவர் போல, “குமார்! எனக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.

66

‘நீ நேரஞ்சென்று வந்தாய். பரிசுகளைக் கொடுத்தாய் விட்டது என்றார் சித்தார்த்த குமாரன்.

66

وو

“நான் என்ன தவறு செய்தேன்? எனக்கென்று ஏதேனும் பரிசு வைத்திருக்கக் கூடாதா?” என்றார் யசோதரையார்

“உனக்குப் பரிசு கொடுக்கக் கூடாதென்பதல்ல. நீ நேரங் கழித்து வந்தது தவறு" என்று சொல்லி, தன் கைவிரலில் அணிந் திருந்த ஆயிரம் பொன் விலையுள்ள கணையாழியைக் கழற்றிக் கொடுத்தார் யசோதரை குமாரி, “குமார! வேறு எதையேனுங் கொடுங்கள்” என்று கேட்டார்.

"வேண்டுமானால் என் கழுத்திலிருக்கும் முத்து மாலையை எடுத்துக்கொள்.” என்று கூறி அதைக் கழற்றினார்.

66

'தங்கள் கழுத்துக்கு இந்த முத்துமாலை வெகு அழகாக இருக்கிறது! அது அங்கேயே இருக்கட்டும்.” என்று சொல்லி விட்டு யசோதரை குமாரி புன்சிரிப்புடன் போய்விட்டார்.

சுத்தோதன அரசன் ஏவலின்படி தூரத்திலிருந்து கருத்துடன் கவனித்துக் கொண்டிருந்த ஒற்றர்கள் இச் செய்தியை அரசருக்குத் தெரிவித்தார்கள். யசோதரை குமாரி வந்ததையும் குமாரனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததையும் அவருக்குக் குமாரன் மோதிரத்தையும் முத்து மாலையையும் வழங்கியதையும் பிறகு