பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

அம்பு பாய்ந்து அதை ஊடுருவிச் சென்றது. அதைக் கண்ட எல்லோரும் கைகொட்டி ஆரவாரம் செய்துமகிழ்ந்தார்கள்.

தொலைதூரம் அம்பு எய்யும் போட்டியில் சித்தார்த்த குமாரன் வெற்றிபெற்றார்!

இரண்டாவதாக அம்பை ஊடுருவிச் செலுத்தும் போட்டிப் பந்தயம் நடந்தது. ஏழு பனைமரங்கள் வரிசையாக இருந்தன. அந்த ஏழு பனைமரங்களையும் ஊடுருவிச் செல்லும்படி அம்பு எய்ய வேண்டும் என்பது பந்தயம். சிலர் ஒரு பனைமரத்தையும் சிலர் இரண்டு மரத்தையும் சிலர் மூன்று மரத்தையும் சிலர் நான்கு மரத்தையும் சிலர் ஐந்து மரத்தையும் ஊடுருவும்படி அம்பு எய்தனர். சித்தார்த்த குமாரன், எய்த அம்பு ஏழு மரங்களையும் துளைத்துக் கொண்டு அப்பால் சென்று தரையில் விழுந்து துண்டு துண்டாக ஒடிந்தது. இதைக் கண்டவர்கள் எல்லோரும் கைகொட்டி ஆரவாரம் செய்து புகழ்ந்தார்கள்.

பிறகு, நீர் நிறைந்த ஏழு இரும்புக் குடங்களை வரிசையாகச் சம தூரத்தில் வைத்து, தீ கொளுத்திய நாரை அம்பில் கட்டி அந்த அம்பைக் குடங்களின் ஊடே எய்யவேண்டும். ஏழு குடங்களையும் அம்பு துளைத்துச் செல்லவேண்டும்; நெருப்பும் அவியாமல் எரியவேண்டும். வில்வீரர்கள் இவ்வாறு அம்பு எய்த போது சிலர் ஒரு குடத்தையும், சிலர் இரண்டு மூன்று குடங்களையும், சிலர் ஐந்து ஆறு குடங்களையும் எய்தார்கள். சித்தார்த்த குமாரன் ஏழு குடங்களையும் ஊடுருவிச் செல்லும் படியும் நெருப்பு அணையாதபடியும் அம்பு எய்து வெற்றி பெற்றார்.

பிறகு வாள் பந்தயம் நடந்தது. ஒரே வெட்டினால் ஏழு மரங்களைத் துண்டாக்க வேண்டும் என்பது பந்தயம். இந்தப் பந்தயத்திலும் சித்தார்த்த குமாரன் வெற்றிபெற்றார். ஒரே வீச்சினால் ஏழு மரங்களை யும் வெட்டினார். ஆனால், வெட்டுண்ட மரங்கள் விழாமல் நின்றன. காற்று வீசியபோது வெட்டுண்ட மரங்கள் விழுந்தபோதுதான் ஏழு மரங்களும் வெட்டுண்டன என்பது தெரிந்தது.

இவ்வாறே குதிரைச் சவாரி செய்தல், மற்போர் செய்தல் முதலிய வீரர்க்குரிய பந்தயங்கள் எல்லாம் நடைபெற்றன. எல்லாப் பந்தயங் களிலும் சித்தார்த்த குமாரன் வெற்றி பெற்று எல்லோராலும் புகழப்