பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

43

நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிச் சென்றது, குமாரன் நிச்சயமாகப் புத்த ஞானத்தை அடைவார் என்பதைக் குறிக்கிறது.

வானத்தில் சக்கராயுதம் சுழன்று சென்றது, குமாரன் போதிஞானம் பெற்று அறநெறியைத் தேவருக்கும் மனிதருக்கும் போதிப்பார் என்பதைத் தெரிவிக்கிறது.

குமரன் பேரொலியுடன் முரசு கொட்டியது, அவர் போதி ஞானம் பெற்று உபதேசம் செய்யும் அறநெறி உலகத்திலே வெகு தூரம் பரவும் என்பதைத் தெரிவிக்கிறது.

உயரமான இடத்தில் அமர்ந்து மணியையும் முத்தையும் வீச அதனை மக்கள் பொறுக்கினார்கள் என்னும் கனவு, புத்த பதவியை அடைந்து உலகத்திலே புத்த தர்மத்தைப் பரப்புவார் என்பதையும் அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என் பதையும் குறிக்கின்றன.

இவ்வாறு நிமித்திகர் கனவுக்கு விளக்கம் கூறியதைக் கேட்டுச் சுத்தோதன அரசர் பெரிதும் கவலையடைந்தார். தமது மகனைத் துறவு கொள்ளாமல் தடுத்து எவ்விதத்திலும் இல்லறத்திலேயே நிறுத்த வேண்டும் என்று உறுதிகொண்டார். ஆகவே அரண் மனையிலும் நகர வாயில்களிலும் அதிகமாகக் காவலாளர்களை நியமித்துச் சித்தார்த்த குமரன் நகரத்துக்கு வெளியே போகாதபடி பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தார். மேலும் அழகுள்ள இள மங்கையர் பலரை அவருக்கு ஊழியராக அமர்த்தினார்.

உலாவச் சென்றது

ஒருநாள் சித்தார்த்த குமரன் அரண்மனைக்கப்பால் உள்ள பூஞ் சோலைக்குப் போக நினைத்தார். சன்னன் என்னும் பெயருள்ள தேர்ப் பாகனிடம் தமது எண்ணத்தைக் கூறித் தேரைக் கொண்டுவரக் கட்டளை யிட்டார். சன்னன், குமரனின் விருப்பத்தைச் சுத்தோதன அரசருக்குத் தெரிவித்தான். அரசர், பூஞ்சோலைக்குச் செல்லும் சாலைகளில் நீர் தெளித்துத் தோரணங்களும் கொடிகளும் கட்டிப் பூரண கும்பங்கள் வைத்து அலங்காரம் செய்யக் கட்டளை யிட்டார். மேலும், கிழவர் நோயாளர் முதலியோர் அவ்விடத்தில் வராதபடி சேவகர்களைக் காவல் வைத்தார்.

பூஞ்சோலையைப் பழுத்த இலைகளும் காய்ந்த சருகுகளும் இல்லாதபடித் தூய்மை செய்வித்தார். கொடிச் சீலைகள் கொடிகள்