பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

முதலியவற்றைக் கட்டி அழகுபடுத்தினார். பூஞ்சோலையில் ஆண் பெயருள்ள மரங்களுக்கு வேஷ்டிகள் கட்டியும் பெண் பெயருள்ள மரங்களுக்குச் சேலைகள் அணிவித்தும் அழகு படுத்தினார். மற்றும் அப்பூஞ்சோலையின் காட்சிகளை அழகும் இனிமையும் உள்ளதாக்கினார். நான்கு காட்சிகள்

சன்னன் நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்டுவந்து நிறுத்தினான். சித்தார்த்த குமாரன் மெல்லிய பட்டாடை களை அணிந்து தேரில் அமர்ந்து பூஞ்சோலையைக் காணச் சென்றார். செல்லும் வழியிலே, எந்தெந்தக் காட்சிகளை இவர் காணக் கூடா தென்று சுத்தோதன அரசர் தடுத்து வைத்தாரோ அக்காட்சிகள், தெய்வச் செயலாக இவருடைய பார்வையில் பட்டன. வழியிலே தொண்டுக் கிழவர் கூனிக்குனிந்துத் தடியூன்றித் தள்ளாடி நடந்து, இருமிக் கொண் டிருந்ததைக் குமரன் கண்டார். நரைத்த தலையும் திரைத்த தோலும் குழி விழுந்து பார்வையற்ற கண்களும் உடைய இந்த முதுமைக் காட்சியை இதற்கு முன்பு கண்டிராத சித்தார்த்த குமாரன், தேர்ப்பாகனை விளித்து, “சன்னா! இது என்ன? அவர் ஏன் இப்படி இருக்கிறார்?” என்றுகேட்டார்.

"அவர் ஒரு கிழவர்” என்றான் சன்னன் “கிழவர் என்றால் என்ன?”

"கிழவர் என்றால் இளமை நீங்கிய முதியவர். இவருடைய உடம்பும் பொறிகளும் புலன்களும் வலிமை குன்றிவிட்டன. இளமை யோடிருந்த இவர் நரைத்துத் திரைத்து மூப்படைந்து தள்ளாதவரா யிருக்கிறார். மரணம் இவரை எதிர்நோக்கி யிருக்கிறது

66

66

‘கிழத்தனம் இவருக்கு மட்டுமா? எல்லோருக்கும் உண்டா?”

"எல்லோருக்கும் கிழத்தனம் உண்டு. இளைஞர் எல்லோரும் முதியவராக வேண்டியவரே.'

“நானும் கிழவன் ஆவேனா?"

"ஆமாம், சுவாமி! ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி எல்லோருக்கும் கிழத்தனம் உண்டு.

இதைக் கேட்ட சித்தார்த்த குமாரனுக்கு மனத்தில் பல சிந்தனைகள் தோன்றின.