பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

45

இது போதும். தேரை மாளிகைக்குத் திருப்புக என்று கூறினார். சித்தார்த்த குமரன் மாளிகையை யடைந்ததும் தான் கண்ட காட்சியைப் பற்றித் தனக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.

66

குமரன்

சுத்தோதன அரசர் தேர்ப்பாகனை அழைத்து சந்தோஷ மாகக் காட்சிகளைக் கண்டாரா?" என்று கேட்டார். தேர்ப்பாகன் குமரன் கண்டதையும் அவர் தன்னைக் கேட்ட கேள்விகளையும்தான் பதில் சொன்னதையும் விவரமாகக் கூறினான்.

சுத்தோதன அரசர், தன் மகன் சித்தார்த்தரை உலக இன் பத்தில் பற்றுக் கொள்ளும்படிச் செய்ய எண்ணி மேலும் அழகான இளங் கன்னியரை அவருடைய ஊழியத்தில் அமர்த்தினார்.

சில காலஞ் சென்ற பிறகு சித்தார்த்த குமரன் மறுபடியும் பூஞ் சோலைக்குப் போய் உலாவ விரும்பினார். அவர் தேர்ப் பாகனை அழைத்துத் தேரைக் கொண்டு வரச் சொல்லி அதில் அமர்ந்து சென்றார். செல்லும் வழியில் இதுவரையில் கண்டிராத ஒரு காட்சியைக் கண்டார். நோயாளி ஒருவர் நோயினால் வருந்தி, இருந்த இடத்திலேயே மல மூத்திரங்களைக் கழித்து அதிலே விழுந்து எழுந்திருக்க முடியாமல் இருக்க, அவருடைய சுற்றத்தார் அவரைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட கௌதமர் சன்னனிடம், இது என்ன? இவர் ஏன் இப்படி இருக்கிறார்? என்று கேட்டார்.

"இவர் ஒரு நோயாளி" என்றான் சன்னன். “நோய் என்றால் என்ன?”

"இந்த நோயிலிருந்து இவர் பிழைக்க மாட்டார்”

"நோயிலிருந்து மீள முடியாதா? எனக்கும் நோய் வருமா?"

“எல்லோருக்கும் நோய் வரும். நோயிலிருந்து மீள முடியாது

கிழத்தனமும் நோயும் மனிதருக்கு வரும் என்பதை அறிந்தபோது சித்தார்த்த குமாரனுக்குச் சிந்தையில் ஏதோ எண்ணம் தோன்றிற்று. அவர் ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு மாளிகைக்குத் திரும்பிச்சென்றார். சுத்தோ தன அரசன் தேர்ப்பாகனை அழைத்துக் குமரன் உலாவச் சென்றதைப் பற்றி விசாரித்தார். சன்னன் வழியில் நடந்ததைக் கூறினான்.