பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

சுத்தோதனர் தம்முடைய குமாரனின் மனத்தை உலக இச்சையில் ஈடுபடும்படிச் செய்ய மேலும், அழகுள்ள இள மங்கையரைச் சித்தார்த்தரின் ஊழியத்தில் அமர்த்தினார்.

சில காலத்துக்குப் பிறகு சித்தார்த்த குமரன் மீண்டும் பூஞ் சோலைக்குப் போய் உலாவி வர விரும்பினார். சன்னன் கொண்டு வந்து நிறுத்தின தேரில் ஏறி உலாவப் போனார். போகும் வழியிலே ஓரிடத்தில் சிலர் கூட்டமாக இருந்து ஒரு பிணத்தைக் கொளுத்துவதற்கு ஈம விறகை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சித்தார்த்தர் அதனைக் கண்டு இவர்கள் என்னசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று சன்னனைக் கேட்டார்.

“யாரோ ஒருவரின் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் இறந்து போனார். அவரை அடக்கம் செய்கிறார்கள்” என்று கூறினான் சன்னன். தேரை அருகில் ஓட்டச் சொன்னார். தேரும் அருகில் சென்றது. கௌதமர் பிணத்தைப் பார்த்தார்.

66

'இறப்பு என்றால் என்ன? வாழ்க்கை முடிந்துவிட்டது என்றால்

என்ன?”

“தாய் தந்தையரும் உற்றார் உறவினரும் இனி அவரைப் பார்க்க முடியாது. இறந்து போனவரும் தன் உற்றார் உறவினரைப் பார்க்க முடியாது என்று சன்னன் கூறினான்.

"சாகாமலிருக்க முடியாதா? நானும் இறந்து விடுவேனா? தாய் தந்தையரையும் உற்றார் உறவினரையும் நான் பார்க்க முடியாமலும் அவர் என்னைப் பார்க்க முடியாமலும் இறந்து போகும் நிலை வருமா?"

66

“ஆம். சுவாமி. சாவு எல்லோருக்கும் உண்டு” என்றான் சன்னன். தேரை மாளிகைக்குத் திருப்பச் சொல்லிச் சித்தார்த்த குமரன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தார். சுத்தோதன அரசர் சன்னன் மூலமாகச் செய்தியை யறிந்தார். சித்தார்த்தருக்குத் துறவு எண்ணம் வராதபடித் தன் குமரனின் வாழ்க்கையில் இன்பங்களையே காணும்படி அவர் பல ஏற்பாடுகளைச் செய்தமைத்தார்.

சில காலஞ் சென்ற பிறகு மீண்டும் பூஞ்சோலைக்குப் போகச் சித்தார்த்த குமரன் விரும்பினார். சன்னன் அவரைத் தேரில் அமர்த்தித் தேரைச் செலுத்திக் கொண்டு போனான். வழியிலே ஒரு துறவி தலையை மழித்து மஞ்சள் ஆடை அணிந்து கொண்டு