பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

-

49

சித்தார்த்த குமாரன் தேரில் அமர்ந்து ஊர்வலமாகத் தமது அரண் மனைக்குத் திரும்பி வந்தார். வரும் வழியில் ஆடவரும் மகளிரும் தத்தம் இல்லங்களில் இருந்து இவரைக் கண்டுமகிழ்ந்தார்கள். ஒரு மாளிகையின் மேல் மாடியில் இருந்த கிரிசா கௌதமி என்பவள் சித்தார்த்த குமாரனைக் கண்டு மகிழ்ந்து இவ்வாறு பாடினாள் :

66

'நிப்புதா நூன ஸா மாதா

நிப்புதோ நூன ஸோ பிதா நிப்புதா நூன ஸா நாரீ

யஸ்ஸா யங் ஈதிஸோ பதி

இவரை மகனாகப்பெற்ற தாய் மகிழ்ச்சியுள்ளவள். இவரை மகனாகப் பெற்ற தந்தை மகிழ்ச்சியுள்ளவர். இவரைக் கணவனாகப் பெற்ற மங்கை மகிழ்ச்சியுள்ளவள் என்பது இப்பாட்டின் கருத்தாகும்.

இவ்வாறு கிரிசா கௌதமி பாடியதைக் கேட்ட சித்தார்த்த குமாரன், உலகத் துன்பங்களினின்று விடுதலை பெறக் கருதிக் கொண்டிருப்பவர் ஆதலின், இப் பாடலுக்கு இவ்வாறு வேறு பொருள் கொண்டார்; காமம், பகை, இறுமாப்பு, பொய்க்காட்சி முதலிய நிப்புதம் (தீ) அவிந்தால், நிர்வாண மோக்ஷம் என்னும் இன்பம் உண்டாகும். இவ்வாறு தமக்குள் வேறு பொருள் கருதிய இவர், இத்தகைய நினைப்பை உண்டாக்கிய கிரிசா கௌதமிக்கு நன்கொடை வழங்கக் கருதி, தமது கழுத்தில் அணிந் திருந்த ஆயிரக்கணக்கான பொன் மதிப்புள்ள முத்து மாலையைக் கழற்றி ஒரு ஆளிடம் கொடுத்து அவளுக்கு வழங்கினார். சித்தார்த்த குமாரன் அனுப்பிய முத்துமாலையை ஏற்றுக்கொண்ட கௌதமி, அவர் தன்னைக் காதலித்ததாகக் கருதிக் கொண்டாள்.

அந்த இரவு

பூஞ்சோலையிலிருந்து நகர்வலமாக அரண்மனைக்கு வந்த சித்தார்த்த குமாரன் அரண்மனையை யடைந்து தேரை விட்டிறங்கி அரண்மனைக்குள் சென்று ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது, தேவ லோகத்து மங்கையரைப் போன்று அழகு வாய்ந்த பெண்கள், நல்ல ஆடையணிகளை அணிந்து கண்ணை யும் கருத்தையும் கவரும் இனிய தோற்றம் உடையவராக அவ் விடம் வந்து இசைக் கருவிகளை வாசித்தும் நடனம் ஆடியும் இசை பாடியும் அவருக்கு மகிழ்ச்சி யூட்டினார்கள். ஆனால், மக்கள் வாழ்க்கையின் துன்பங்களைக் கண்டு வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டிருந்த சித்தார்த்த குமாரனுக்கு