பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

களையும் நவமணி மாலைகளையும் ஏந்திக் கொண்டு விண்ணிலிருந்து இறங்கி மும்முறை வலம் வந்து சித்தார்த்த குமாரனைக் கைகூப்பி வணங்கி நின்றான்.

இல்வாழ்க்கையின் அன்புப் பிடியினின்று மீள்வது அருமை யாயினும் சித்தார்த்த குமாரன், எல்லா மக்களும் உய்வதற்கு நன்னெறியைக் காணவேண்டும் என்னும் பெருங் கருணையினாலே உந்தப்பட்டு, மகனைக் காண அறைக்குள்ளே செல்லாமல் வெளியே வந்துவிட்டார். தாம் துறவு கொண்டால் தமது சுற்றத்தாரும் மற்றவரும் மனம் வருந்துவார்கள் என்றாலும், தாம் துறவுகொள்வது உலக மக்களின் நன்மைக்காக வாதலின் இவர்களின் வருத்தத்தைப் பொருட் படுத்தாமல் உப்பரிகையினின்றும் இறங்கிக் கீழே வந்தார். பிரயாணத் திற்கு ஆயத்தப்படுத்திய கந்தகன் என்னும் குதிரையுடன் சன்னன் வாயிலில் காத்திருந்தான். சித்தார்த்த குமரன் குதிரை மேல் அமர்ந்து, சன்னனைக் குதிரை யின் வாலைப் பிடித்துக் கொள்ளச் சொல்லித் தென்கிழக்குப் பக்கமாகக் குதிரையைச் செலுத்தினார்.