பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

65

வெளிவந்தது. தலையின் உச்சியில், தச்சன் துரப்பணத்தால் (துளைப் பாணத்தால்) துளைப்பதுபோன்று, பெரிய வலி ஏற்பட்டது. இவ்விதம் வலி ஏற்பட்டபோதும் இவர் விடாமல் இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்துவந்தார். காதுகள் வழியாக மூச்சு வெளி வருவதையும் தடுத்து இந்தத் தியானத்தைச் செய்தார். அப்போது கண்களின் வழியாக மூச்சு வெளிப்பட்டது. அப்போது விடாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு அப்பிரணத்தியானம் செய்தார். அப்போது பொறுக்க முடியாத வலி தேகத்தில் உண்டாயிற்று. பலமுள்ள ஒரு ஆள் வாரினால் இழுத்துக் கட்டுவது போல் இவருடைய தலையில் வலி உண்டாயிற்று.

வாய், மூக்கு, காது, கண் இவைகளின் வழியாக மூச்சு வெளிப் படுவதைத் தடுத்துவிட்டபடியினாலே இவருடைய வயிற்றில் கத்தியால் குத்திக் கீறுவதுபோன்று வலி உண்டாயிற்று. பலசாலிகள் இருவர் வலி வற்ற ஒரு ஆளைப் பிடித்துத் தள்ளி நெருப்புத் தணலில் அழுத்திப் புரட்டினால் எப்படியிருக்குமோ அதுபோன்று உடம்பு முழுவதும் எரிவது போன்று இருந்தது. இவ்வாறு கொடிய துன்பமும் வலியும் ஏற்பட்ட போதிலும் அப்பிரணத்தியானத்தை விடாமல் செய்து வந்தார். கடைசியாக இவர் மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தார்.

அப்போது இவரைக்கண்ட தேவர்கள் சிலர், “அர்ஹந்தர்கள் இறந்தவர்களைப் போலவும் அசைவற்றுக் கிடப்பார்கள். இது அர்ஹந்தர் இருக்கும் ஒரு நிலை. கௌதமரும் அர்ஹந்த நிலையை யடைந்து இவ் வண்ணம் இருக்கிறார்" என்று கூறினார்கள். வேறு சில மக்கள் இவர் விழுந்து கிடப்பதைக் கண்டு, இவர் இறந்துபோனார் என்று கருதினார்கள். அவர்கள் சுத்தோதன அரசனிடம் சென்று, “உமது மகன் சித்தார்த்தர் இறந்துவிட்டார்” என்று சொன்னார்கள். “இதைக் கேட்ட அரசன்,

"என்னுடைய மகன் புத்த நிலையையடைந்த பிறகு இறந்தாரா, அல்லது அந்நிலையை யடையவதற்கு முன்பு இறந்தாரா?" என்று அவர்களை வினவினார். அதற்கு அவர்கள், "புத்த பதவி யடைவதற்கு முன்பே இறந்துவிட்டார்” என்று விடையளித்தார்கள். அதற்கு அரசன், “என் மகன் புத்தபதவி அடைவதற்கு முன்பு இறக்கமாட்டார். நீங்கள் சொல்வது தவறு” என்று கூறி அவர்கள் சொன்னதை நம்பவில்லை.

மூர்ச்சையடைந்து தரையில் விழுந்த கௌதம முனிவர் நெடுநேரம் சென்ற பிறகு மூர்ச்சை தெளிந்து எழுந்தார். பிறகு "இனி உணவு