பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

-

81

காணப்படும் வானவட்ட மானது போதிசத்துவரைச் சூழ்ந்திருக்கும் பிரகாரம் போன்று காணப்பட்டது. பூமண்டலம் போதிசத்துவருக்கு அமைந்த ஓர் இல்லம்போலத் தோன்றியது. அடிமுதல் நுனி வரையில் நூறு முழம் உயர்ந்து வளர்ந்த அந்த அரசமரமானது மயில் ஒன்று தன் தோகையை விரித்திருப்பது போன்று காணப்பட்டது. இந்தப் போதி மரத்தின் அடியிலே அமர்ந்து வசவர்த்தி மாரனை (தேவ புத்திர மாரனை) வென்ற போதிசத்துவர் கிலேசமாரன், மிருத்யு மாரன், ஸ்கந்தமாரன், அபிசம்ஸ்கார மாரன் என்னும் மற்ற மாரர்களையும் வெற்றி கொள்வதற்கு ஆயத்தமாக இருந்தார். அவரிடம் வந்த தேவர்களும் பிரமர்களும் அவரை வணங்கி வாழ்த்திப் போற்றிப் பிறகு தத்தம் இருப்பிடம் சென்றார்கள்.

போதிஞானம் அடைதல்

ս

'மதிநாள் முற்றிய மங்கலத் திருநாளாகிய வைசாகப் பௌர்ணமி அன்று மாலை வசவர்த்தி மாரனை வென்ற போதிசத்துவர், அவ்விர வின் முதல் யாமத்திலே யோகத்தில் அமர்ந்து படிப் படியாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது நான்காவது என்னும் யோகங்களைச் செய்து நாலாவது யோகத்திலிருந்து மனத்தைச் செலுத்தித் தமது முன் பிறப்புக் களைக் காணத் தொடங்கினார். இவ்வாறு முற்பிறப்புக்களைக் காணும் இவருக்கு, முன்பு உண்டாகியிருந்த கணக்கற்ற பிறப்புகள் புலனாயின. இந்த முதல் யாமத்திலே யோகத்தை (அறியாமையை) நீக்கி முற் பிறவியைக் காண்கிற ஞானத்தையடைந்தார். இந்த ஞானத்திற்கு ‘முதல் சித்தி லாபம்' என்பது பெயர்.

முதல் சித்தி லாபம் என்னும் இந்த ஞானத்தின் மூலமாகத் தமது முற்பிறப்புகளைக் கண்ட போதிசத்துவர், “நாமரூபங்கள் (உயிருடன் கூடிய உடம்பு) அந்தந்தப் பிறப்பிலே உண்டாகி அந்ததந்தப் பிறப்பிலேயே நாமரூபங்கள் தோன்றியபோது ஐம் பொறிகளும் ஐம் புலன்களும் தோன்றி அவையும் அந்தந்தப் பிறப்பிலேயே மறைந்து விட்டன; அழிந்துவிட்டன. ஆனால் தனிப்பட்டதும் அழியாததுமான உயிராவது, ஜீவனாவது, புருஷனாவது கிடையாது. ஆகையினாலே, இவைகளை உண்டாக்கிய கடவுளாவது பிரமனாவது மாரனாவது கிடையாது!” என்று அறிந்து இருபதுவிதமான சத்காய திருஷ்டியை (ஆத்ம திருஷ்டியை) நீக்கினார். இதுவே போதிசத்துவருக்குக் கிடைத்த முதல் விசுத்தியாகும்.