பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

பிறகு மறுபடியும் உதய வியய ஞானத்திலிருந்து சம்ஸ் காரங்கள் அனித்தம், துக்கம், அனாத்மம் என்று சிந்திக்கும்போது போதிசத்து வருக்கு முன்போலவே சம்ஸ்காரோபேக்ஷர ஞானத்தின் கடைசியில், அநுலோம் கோத்ரபூ ஞானத்திற்குச் சமீபமாகத் துக்கத்தைக் கண்டு கொண்டே சமுதய சத்யத்தை நீக்கிக்கொண்டே ராக துவேஷ மோகங்கள் முதலியவற்றைப் பலவீனப் படுத்திக் கொண்டே நிரோதசத்யத்தைப் பெற்றுக் கொண்டே அஷ்டாங்க மார்க்கத்தை அனுசரித்துக் கொண்டே இரண்டாவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது சத்ருதகாமீ மார்க்க ஞானம் அடைந்தார்.

பின்னர், போதிசத்துவர் உதய வியய ஞானத்திலிருந்து சம்ஸ் காரங்களுடைய இலக்கணங்களைப் பார்க்கத் தொடங்கினார். முன் போலவே சம்ஸ்காரோ பேக்ஷா ஞானத்தின் கடைசியில் அனுலோம் கோத்ரபூ ஞானங்கள் தோன்றி துக்கத்தைக் கண்டு, சமுதயத்தை நீக்கி, ராகத்வேஷ முதலியவற்றை அகற்றி, நிர்வாண மோக்ஷத்தையடைந்து கொண்டே அஷ்டாங்க மார்க்கத்தை அனுசரித்துக்கொண்டே மூன்றாவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது அனாகாமீ மார்க்க ஞானம் அடைந்தார்.

அப்போது, இன்னும் சில கிலேசங்கள் மிஞ்சி நிற்பதைக் கண்டு, முன்போலவே உதய வியய முதலான ஒன்பது விதமான பெரிய விதர்சனா ஞான மூலமாக சம்ஸ்காரங்கள் அனித்யம், துக்கம், அனாத்மம், அசுசி என்று அறிந்து படிப்படியாக ஆராயும்போது, போதி சத்துவருக்கு சம்ஸ்காரோபேக்ஷா ஞானமும் பிறகு அனுலோம கோத்ரபூ ஞானங்களும் பிறந்தன. அப்போது துக்கங்களை யெல்லாம் கண்டு சமுதய சத்தியத்தை (வாசனா தோஷங்களை) அறவே நீக்கி நிர்வாணத்தைப் பெற்றுக் கொண்டே மார்க்கத்தை அனுஷ்டித்துக் கொண்டே நான்காவது ஞான தரிசனத்தைப் பெற்றார். அதாவது அர்ஹந்த மார்க்க ஞானம் அடைந்தார்.

மேலே கூறின சுரோதபத்தி, சத்ருதகாமி, அனாகாமி, அர்ஹந்த என்னும் நான்கு மார்க்கங்கள் ஞான தர்சன விசுத்தி என்று கூறப்படும்.

போதிசத்துவருக்கு அர்ஹந்தமார்க்க ஞானத்துடன் நான்கு விதமான பிரதிசம்பிதா ஞானமும் ஆறுவிதமான அசாதாரண ஞானமும் பதினான்கு விதமான புத்தஞானமும் பதினெட்டு விதமான ஆவேணிக தர்மங்களும் பத்துவிதமான பலமும் நான்கு விதமான வைசாரத்யங்களும் முதலான கணக்கற்ற புத்தகுணங்கள் நிறைந்தன.