பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

மீளும் கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும் தோற்றம் மீளப் பிறப்பு மீளும் பிறப்புப் பிணி மூப்புச்

சாக்கா டவல மரற்றுக் கவலை

கையா றென்னுக் கடையில் துன்பம் எல்லாம் மீளும் இவ் வகையான் மீட்சி”4

/87

இவ்வாறு நிதானங்களைச் சிந்தித்துப் பார்த்த பகவன் புத்தர் இவ்வாறு உதானம் உரைத்தார்.

"பிறவித்துன்பத்தை நீக்கும் பொருட்டு முயற்சியோடு தியானம் செய்து பாவத்தை நீக்கின யோகியானவர், பௌத் தத்தின் முப்பத்தேழு தத்துவத்தை எப்பொழுது உணர்கிறாரோ அப்பொழுதே - பேதமை முதலான காரணங்களினாலேயே உண்டான துக்கங்களைப் பிரித்து ஆராய்ந்து பார்க்கிற படியினாலே அவருடைய ஐயங்கள் நீங்கி விடுகின்றன.”

அதன் பின்னர், இரவின் மூன்றாவது யாமம் வந்தது. அப்போது பகவன் புத்தர் ஊழின்வட்டமாகிய பன்னிரு நிதானம் என்னும் தத்துவத்தைத் தொடக்கத்தில் இருந்து கடைசி வரையிலும், (பேதைமை சார்வாச் செய்கையாகும் - நுகர்ச்சி என்பதுவரை) பிறகு கடைசியிலிருந்து தொடக்கம் வரையிலும் (பேதமைமீளச் செய்கையாகும் - மீட்சி என்பது வரை) மறுபடி சிந்தித்துப்பார்த்தார். பார்த்த பிறகு, இவ்வாறு உதானம் ஓதினார்.

'துக்கங்களை அடக்கிப் பாவங்களை யொழிக்கிற ஆற்றல் உள்ள துறவியானவர், முப்பத்தேழுவிதமான தர்மங்களை அறியும்போது, இருள் படலத்தை ஓட்டி ஒளியைப் பரப்புகிற சூரியனைப் போல, மாரனுடைய எல்லாவிதமான சேனைகளையும் ஓட்டி வெற்றி காண்கிறார்.' இரண்டாம் வாரம்

புத்த பதவி யடைந்தபிறகும் ததாகதர், ஆசனத்தைவிட்டு எழுந் திராமல் போதிமரத்தின் அடியிலேயே அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட சில தேவர்கள், “ஆசனத்திலிருந்து பகவன் புத்தர் எழுந்திருக் காதபடியினாலே இன்னும் இவர் அடைய வேண்டிய நிலைகளும் உண்டு போலும்” என்று நினைத்தார்கள். இவ்வாறு தேவர்கள் சிலர் எண்ணியதைப் பகவன் புத்தர் அறிந்தார். ஆகவே, அவர் அவர்