பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

தாம் கண்ட போதி தர்மத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந் தார். அப்போது, தாம் கண்ட போதி தர்மத்தை உலகத்தவருக்குப் போதிக் காமல் வாளா இருப்பது நலம் என்று அவருக்கு எண்ணம் தோன்றியது. பகவர் எண்ணிய இந்த எண்ணத்தைச் சகம்பதி பிரமன் அறிந்தார். ஐயோ! உலகம் அழிந்துவிடும். புனிதரான சம்புத்தராகிய ததாகர், தாம் கண்ட அறநெறியை உலகத்திற்குக் கூறாமல் போனால் உலகம் அழிந்து விடும்” என்று சகம்பதி பிரமன் எண்ணினார்.

66

உடனே, பிரமலோகத்தைவிட்டுப் புறப்பட்டுத் ததாகதரிடம் விரைந்து வந்தார். வந்து, தமது மேல் ஆடையை எடுத்து ஒரு தோளின் மேல் போட்டுக் கொண்டு, வலது முழங்காலைத் தரையில் ஊன்றி முட்டியிட்டு அமர்ந்து இருகைகளையுங் குவித்துத் தலைமேல் தூக்கித் ததாகதரை வணங்கி இவ்வாறு கூறினார்: "சுவாமி தாங்கள் அருள் கூர்ந்து தர்மத்தை உலகத்துக்குப் போதியுங்கள். பகவன் சம்புத்தர் உலகத்துக்குத் தர்மத்தைப் போதிக்கவேண்டும். இருளினால் மறைக்கப் படாத அறிவுக்கண் படைத்த மக்கள் பலர் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அறநெறியைக் கேளாமல் இருந்தால், நிர்வாண மோக்ஷத்தை யடைய மாட்டார்கள். அவர்கள் தர்மத்தை யறிந்துகொள்ளக் கூடியவர்கள். சம்புத்தரால் கண்டுபிடிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் கேட்கட்டும்.”

இவ்வாறு கூறிய பிரமன் மேலும் கூறுவார்:

“ஓர் ஆள் மலையின்மேல் ஏறி அதன் உச்சியிலேயுள்ள ஒரு பாறையின்மேல் நின்று மலையடியில் உள்ள மனிதரைக் காண்பது போல், ஓ, புத்தரே! உண்மையான மெய்ஞ்ஞானம் என்னும் உயர்ந்த இடத்தில் ஏறியுள்ள தாங்கள், அருள்கூர்ந்து கீழே நோக்கியருளுங்கள். துன்பத்தினால் துக்கப்பட்டு வருந்துகிற மக்களை, பிறந்து இறந்து அல்லல்படுகிற மானிடரை, துக்கத்தி லிருந்து நீங்கிய ததாகதரே! அருள் கூர்ந்து நோக்கியருளுங்கள்.

"எழுந்தருளும். ஓ, வீரரே! உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்த ருளுங்கள். பகவரே! தர்மத்தை உபதேசம் செய்தருளுங்கள். உலகத் திலே தர்மத்தை அறிந்துகொள்ளக் கூடிய மக்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறு சகம்பதி பிரமன் கூறியதைக் கேட்ட பகவன் புத்தர் கூறினார்: “எனது மனத்திலே இவ்வாறு நினைக்கிறேன். என்ன