பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

இதனைக் கேட்ட உபகர், “முனிவரே! தங்களைப் பரிசுத்தரான உயர்ந்த அனந்தஜினன் என்று சொல்லிக் கொள்கிறீரா?” என்று கேட்டார்.

66

"எல்லா ஜினர்களும் என்னைப் போன்றே ஆசவங்களை அவித்தவர்கள். நான் எல்லாப் பாவங்களையும் வென்றவன். ஆகையினாலே, உபகரே! நான் அனந்தஜினன்தான்” என்று பகவன் புத்தர் கூறினார்.

இதனைக்கேட்ட ஆஜீவகராகிய உபகர், "முனிவரே! அப்படியும் இருக்கலாம்” என்று கூறித் தலையை யசைத்துத் தெற்கு நோக்கிச் சென்றார்.

பகவன்புத்தர் வடக்கு நோக்கிக் கயா தேசத்தைக் கடந்து உரோகிதவத்து, உருவில்லாகல்பம், அனாலயம், சாரதிபுரம் முதலான இடங்களையும் கங்காநதியையும் கடந்து வாரணாசி நகரத்திற்குப் போனார். அன்று ஆஷாட பௌர்ணமி நாள்.

இஸிபதனம் சேர்தல்

மாலை வேளை. பகவன் புத்தர் வாரணாசி நகரத்தின் அருகில் இருந்த இஸிபதனம் என்னும் தோட்டத்திற்குச் சென்றார். அங்கு இருந்த ஐந்து துறவிகள் இவர்கள் உருவேல ஆசிரமத்தில் போதிசத்துவரின் சீடராக இருந்து பிறகு அவரைவிட்டுப் போனவர்கள் - தூரத்தில் வருகிற பகவன் புத்தரைப் பார்த்தார்கள். பார்த்துத் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டார்கள். “அதோ கௌதமர் வருகிறார். கடுமையான தபசை நீக்கிச் சுகவாழ்க்கையை மேற்கொண்ட கௌதம முனிவர் வருகிறார். அவர் வந்தால் நாம் அவரை வணங்கக் கூடாது. எழுந்து நின்று மரியாதை செய்தல்கூடாது. ஆனால், ஒரு ஆசனத்தை மட்டும் விட்டுவைப்போம். அவருக்கு விருப்பம் இருந்தால் அதில் உட்காரட்டும்.”

பகவன் புத்தர் அவர்களுக்கு அருகில் வந்தபோது, அந்த ஐந்து துறவிகளும் தமக்குள் பேசிக்கொண்டபடி இருக்கவில்லை. அவர்கள் எழுந்து சென்று பகவரை எதிர்கொண்டழைத்தார்கள். ஒருவர், அவர் கையிலிருந்த பாத்திரத்தையும் துணியையும் வாங்கினார். ஒருவர், இருக்க ஆசனம் கொடுத்தார். இன்னொருவர் கை கால் கழுவ நீரும், துடைக்கத் துணியும் கொண்டு வந்தார். பகவன் புத்தர் அமர்ந்து கால் கழுவிக் கொண்டார்.